ETV Bharat / state

சீசன் காலத்தில் மக்கள் வந்தால் குற்றாலத்தில் இது நிகழும்... - kutralam Falls polluted by people

தென்காசி: கரோனா காலத்தில் குற்றால அருவிகள் தெளிந்த கண்ணாடி போல் காட்சியளிக்கிறது. ஊரடங்கு இல்லாத காலங்களில் இதே நிலை தொடருமா என்பதே கேள்விக்குறிதான். இதுபற்றிய சிறிய தொகுப்பு

kutralam
kutralam
author img

By

Published : Oct 23, 2020, 12:21 AM IST

தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி குற்றாலம் அமைந்துள்ளது. இங்கு மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகள் அமைந்துள்ளன. தென்மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமான குற்றால அருவிகளை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும். சீசன் காலங்களில் நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்து செல்வார்கள்.

வெறிச்சோடி காணப்படும் குற்றாலம்
வெறிச்சோடி காணப்படும் குற்றாலம்

அவ்வாறு குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கழிவு பொருள்களை அங்கேயே விட்டுச் செல்வதால் அதன் தரத்தை சீரழிப்பதாகவும், மாசுபாட்டை ஏற்படுத்துவதாகவும் கூறி மதுரை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கறிஞர் டிஎஸ்ஆர் வெங்கட்ரமணாவை வழக்குறிஞர் ஆணையராக நியமித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

மலைபோல் குவியும் குப்பைகள்
மலைபோல் குவியும் குப்பைகள்

அதன்படி குற்றாலம் பிரதான அருவி அருகே கழிவுநீர் கலக்கிறது, சுற்றுலாவாசிகள் அருவியின் அருகே மது அருந்துகின்றனர் என்பன உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்த நீதிமன்றம் குற்றாலத்தில் எண்ணெய், ஷாம்பு, சோப்பு, சீயக்காய், பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்கள் விற்க தடை விதித்து 2014ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

தூய்மைப்பணியாளர்கள்
தூய்மைப்பணியாளர்கள்

சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், குற்றாலம் பொலிவு பெற்று காட்சியளித்தது. தற்போது நீடித்துவரும் கரோனா ஊரடங்கால், குற்றாலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கும், இதமான சூழலையும் பொதுமக்கள் யாரும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மக்களின் வருகை இல்லாததால் குற்றால அருவிகள் மாசுபாடின்றி சுத்தமாக காட்சியளிக்கிறது. ஊரடங்கு இல்லாத காலங்களில் இதே நிலை தொடருமா என்பதே கேள்விக்குறிதான்.

குற்றாலத்தில் பேரூராட்சி சார்பில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சிறப்பு நிலை பேரூராட்சிகள் குப்பைகளை அள்ளுவதற்காக எட்டு ஆட்டோக்கள், ஒரு டிப்பர் லாரி பயன்படுத்தப்படுகிறது. இதற்கென்று தூய்மைப் பணியாளர்கள் 30 பேர் பணியாற்றி வருகின்றனர். இதுபோக தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் என 10 பேர் செயல்படுகின்றனர்.

குற்றாலத்தை நேசிப்போம்

லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நேரங்களில் இவை சாத்தியமற்றது. அந்த வகையில் குற்றாலம் பேரூராட்சி அதிநவீன குப்பை அள்ளும் இயந்திரங்கள், தூய்மைப் பணியாளர்களுக்கான உபகரணங்கள், அதிகப்படியான தூய்மைப் பணியாளர்கள் நியமனம் ஆகியவை தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அதிகளவு வருவாய் ஈட்டித் தரக்கூடிய குற்றாலம் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் காணப்படுகிறது.

இயற்கையின் கொடையில் அமைந்துள்ள இந்த குற்றால நீர் வீழ்ச்சிகள் மாநில அளவில் மட்டுமே சுற்றுலாத்தலமாக காட்சியளிக்கிறது. இதனை மேம்படுத்தும் நோக்கில் அரசு செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் கொட்டித் தீர்த்த மழை : ஒரு மணி நேரத்தில் 6.5 செ.மீ பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.