ETV Bharat / state

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில்.. தென்காசியில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

author img

By

Published : Jul 8, 2023, 1:38 PM IST

புன்னையாபுரம் பகுதியில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமூகத்தினர் இணைந்து கட்டிய பொதிகை ஈஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

பொதிகை ஈஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேக விழா

தென்காசி: கடையநல்லூர் அருகே புன்னையாபுரம் பகுதியில் அனைத்து சமுதாய மக்களால் கட்டப்பட்டு வந்த பொதிகை ஈஸ்வரர் கோயில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. தற்பொழுது பணி முழுமையாக முடிவடைந்த நிலையில் நேற்று (ஜூலை 7) கும்பாபிஷேகம் விழா தொடங்கியது. இந்த கும்பாபிஷேகத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக டிஜிபி வன்னியபெருமாள் கலந்து கொண்டார்.

இக்கும்பாபிஷேக விழாவிற்காக அப்பகுதி பொதுமக்கள் பல நாட்களாக விரதம் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து புனித நீரை கோயிலின் கலசத்திற்கு ஊற்ற கொண்டுவந்தனர். அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பொதிகை ஈஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தமிழகத்திலிருந்து பல்வேறு கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

இதையும் படிங்க: திருப்பனந்தாள் பெரியநாயகி செஞ்சடையப்பர் கோயில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இக்கோயிலிற்கு சிங்கிலிபட்டி, புளியங்குடி, சிந்தாமணி மற்றும் பல்வேறு பகுதியிலிருந்து பொதுமக்கள் ஏராளமாக வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயில் வளாகத்தை சுற்றி ஆலமரம், புங்கன் மரம், வேம்புமரம் உள்ளிட்ட மகத்துவம் வாய்ந்த பல்வேறு வகையான 30க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை டிஜிபி வன்னியபெருமாள் நட்டு வைத்தார்.

அங்கு நட்டு வைத்துள்ள அனைத்து மரங்களையும் முழுமையாக பராமரித்து நன்கு வளர்க்க வேண்டும் என பொதுமக்களை டிஜிபி வன்னியபெருமாள் கேட்டுக்கொண்டார். மரம் பற்றியும் மரத்தின் அவசியம் பற்றியும் பொது மக்களுக்கு அவர் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மற்றும் கோயில் வளாகத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவதால் தென்காசி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அசோக் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் அமர்த்தப்பட்டு இருந்தனர்.

மேலும், இந்த கும்பாபிஷேக விழாவிற்க்கு சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார் ஆகியோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.மேலும் இக்கோயிலுக்கு அனைத்து சமுதாய மக்களும் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: 63 அடி தங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது அண்ணாமலையார் கோயில் ஆனி பிரம்மோற்சவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.