ETV Bharat / state

‘செண்பகவல்லி அணையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்’ - புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி வேண்டுகோள்!

சிவகிரி அருகே உடைந்த நிலையில் காணப்படும் செண்பகவல்லி அணையை சீரமைத்தால் தென்காசி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதனை பயன்பாட்டுக்குக் கொண்டுவர புதிய தமிழகம் கட்சி உறுதுணையாக இருக்கும் என கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 9:05 PM IST

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்சாமி செய்தியாளர்கள் சந்திப்பு

தென்காசி: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது சிவகிரி ஜமீன் -திருவாங்கூர் சமஸ்தானம் ஒப்பந்தம் செய்து செண்பகவல்லி தடுப்பணை கட்டப்பட்டது. அந்த தடுப்பணையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு காட்டாற்று வெள்ளத்தில் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பை சீர் செய்வதற்காக, எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில், தமிழக அரசு கேரள அரசுக்குப் பணம் கொடுத்ததும் கேரள அரசு தடுப்பு அணையைச் சீர்படுத்தவில்லை. பலமுறை தமிழக அரசு வேண்டுகோள் விடுத்த பிறகு, வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டது.

இந்த அணை சர்செய்யப்பட்டால், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளில் நீர் தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணையை சீரமைத்துத் தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, சிவகிரி அருகே உள்ள செண்பகவல்லி அணையில் இருந்து வரக்கூடிய நீர் வழி தடங்களை பார்வையிட்டார்.

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இயற்கை வளங்களைப் பாதுகாப்பதாக இருந்தாலும் சரி, மலை வளங்களை அதிகரிப்பதாக இருந்தாலும் சரி, அவைகள் தான் மிகப்பெரிய பொக்கிஷங்களாக இருக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டினுடைய மேற்கு எல்லையில் ஏறக்குறைய 1000, 1500 கிலோமீட்டர் தமிழகத்தினுடைய எல்லையாகவும் தமிழகத்திற்கு பெரிய அளவிற்கு மழை பொழிவை உருவாக்கக்கூடிய பகுதியாகவும், இயற்கை வளங்களை கொடுக்கக்கூடிய பகுதியாக இருந்து வருகிறது.

தமிழகத்தினுடைய எல்லையில் இருக்கக்கூடிய அந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே ஏறக்குறைய 30 ஆயிரம் டிஎம்சி அளவிற்கு ஆண்டொன்றுக்கு மழை பொழிந்து அது பெரிய அளவிற்கு அரபிக் கடலில் கலக்கிறது. ஆனால், தமிழகத்தினுடைய பரந்துவிட்டு கிடக்கக்கூடிய நிலங்களை பலப்படுத்தக்கூடிய அளவிற்கு அவைகள் பயன்பாட்டுக்கு வரவில்லை.

அதற்கு மிக முக்கியமான காரணம் ஒரு மாநிலத்தினுடைய ஒரு நாட்டினுடைய எல்லைகள் பகிர்ந்து அளிக்கப்படுகின்ற பொழுது இரண்டு முக்கியமான விஷயங்கள் அளவுகோலாக கொல்லப்படும். ஒன்று இரண்டு மாதங்கள் நாட்டுக்கு குறுக்கே போகக்கூடிய ஆறுகளாக இருந்தால் ஒரு கரை ஒரு நாட்டினுடைய எல்லையாகவும் இருக்கும் அந்த நதிநீர் இரண்டு நாடுகளுக்கும் சரி சமமாக பகிர்ந்து கொள்ளப்படும்.

தலையணை என்று அணைக்கட்டை பார்வையிட்டேன் அது ஏறக்குறைய 1000, 1500 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயருடைய காலத்தில் கட்டப்பட்டது. கட்டப்பட்ட அந்த ஆணை நேர்த்தியாக குறைந்த பொருட் செலவில் கட்டப்பட்டுள்ளது. அதில் இரண்டு கால்வாய்களாக பிரிகிறது, ஒன்று ராஜசிங்கப்பேரி கால்வாய் என்றும் மற்றொன்று வாசுதேவநல்லூர் பகுதியில் செல்லக்கூடிய குலசேகர பேரிக்காய் என்றும் பிரிகிறது.

அந்தக் காலத்திலேயே சண்டை, சச்சரவு இருக்கு கூடாது என்பதற்காக ஒவ்வொரு பகுதிக்கும் சரிசமமாக நேர்த்தியாக அவர்கள் தீர்வு கண்டிருக்கிறார்கள். அதில் உள்ள தடுப்புச் சுவர்கள் பெரிய மலை காட்டாற்று வெள்ளம் உள்ளிட்ட பிரச்னைகளால் இடிந்து விழுந்து விட்டது. அதன் காரணமாக முழு தண்ணீரும் வீணாக அரபிக் கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

அந்தத் தடுப்புச் சுகர் சரியாக இருந்தால் அந்தத் தண்ணீர் எல்லா காலகட்டத்திலும் தலையணைக்கு வரவழைத்து சிவகிரி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், கயத்தாறு வரை தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலான நிலங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். அதற்குண்டான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும். விரைவில் தலையணையிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அணைக்கட்டுக்கு நான் செல்ல உள்ளேன். சில கோடிகளில் அதை சீரமைக்க முடியும் என கருதுகிறேன் எனவே முறையாக நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன்” என்றார்.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை திட்டம்; காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.