ETV Bharat / state

பாலியல் புகார் செய்த 2ஆவது மனைவியை குத்திக்கொன்றவர் கைது! - மனைவியை கொலை செய்த கணவர் கைது

தென்காசி: ஆலங்குளம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் செய்த இரண்டாவது மனைவியை, கத்தியால் குத்தி கொலைசெய்த கணவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

பாலியல் புகார் செய்த இரண்டாவது மனைவி: கத்தியால் குத்தி கொலைசெய்த கணவர்!
Women murder case in tenkasi
author img

By

Published : Aug 26, 2020, 1:39 AM IST

தென்காசி பாவூர்சத்திரம் பகுதியில் பழக்கடை நடத்திவருபவர் முருகன். இவருக்குத் திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் திரிச்சுழி பகுதியைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்ணுடன் வியாபாரம் செய்ய சென்றபோது பழக்கம் ஏற்பட்டு அவரை பாவூர்சத்திரம் அழைத்துவந்து கடந்த 9 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவந்தார் .

ஏற்கனவே சித்ராவுக்குத் திருமணமாகி மூர்த்தி என்ற கணவரும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்துவருவதாக தெரிகிறது. அதில் ஒரு பையன் மூர்த்தியுடன் இருக்கிறார். சித்ராவுடன் மகள் விஜயலட்சுமி வந்துவிட்டார்.

இந்த நிலையில், விஜயலட்சுமிக்கு முருகன் அவ்வப்போது பாலியல் ரீதியான துன்பங்களைக் கொடுத்துவந்துள்ளார். இதனைத் தொடர்ந்து விஜயலட்சுமி தாயிடம் கூறவே அவர் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைத் தொடர்ந்து ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இரண்டு தரப்பையும் விசாரணைக்கு வரச் சொல்லியுள்ளார்.

அதன்படி இரண்டு தரப்பும் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு முன்னிலையாகி விசாரணை முடிந்து வெளியே வரும்பொழுது முருகன் மறைத்துவைத்திருந்த கத்தியைக் கொண்டு காவல் நிலையத்தின் முன்பே சித்ராவின் மார்பு, வயிறு உள்ளிட்ட பல பகுதிகள் குத்தி, கீழே தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பியுள்ளார்.

உடனடியாக, அங்கிருந்த காவலர்கள் சித்ராவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே சித்ரா உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆலங்குளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முருகனைத் தேடிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.