ETV Bharat / state

பாலியல் புகார் செய்த மனைவியை கொலைசெய்த கணவர் கைது! - தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி: ஆலங்குளம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் செய்த இரண்டாவது மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை காவல் துறையினர் இன்று கைதுசெய்தனர்.

பாலியல் புகார் செய்த மனைவியை கொலைசெய்த கணவர் கைது!
Wife killed by her husband
author img

By

Published : Aug 26, 2020, 8:06 PM IST

தென்காசி பாவூர்சத்திரம் பகுதியில் பழக்கடை நடத்தி வருபவர் முருகன் . இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் திரிச்சுழி பகுதியைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்ணுடன் வியாபாரம் செய்யச் சென்றபோது பழக்கம் ஏற்பட்டு அவரை பாவூர்சத்திரம் அழைத்து வந்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வத்துள்ளார்.

ஏற்கனவே சித்ராவுக்கு திருமணமாகி மூர்த்தி என்ற கணவனும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அவர்களுக்குள் ஏற்பட்ட தாகராறு காரணமாக இருவரும் பிரித்து வாழ்ந்துவருகின்றனர். அதில் ஒரு பையன் மூர்த்தியுடன் இருக்கிறார். ஒரு மகள் சித்ராவுடன் வந்து விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் சித்ராவின் மகள் விஜயலட்சுமிக்கு முருகன் அவ்வப்போது பாலியல் ரீதியான துன்பங்களைக் கொடுத்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து விஜயலட்சுமி தாயிடம் கூறவே அவர் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரைத் தொடர்ந்து, இரண்டு தரப்பும் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜராகி விசாரணை முடிந்து வெளியே வரும்போது முருகன் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சித்ராவை குத்தி கொலைசெய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இந்நிலையில், காவல் துறையினர் அவரைத் தேடிவந்த நிலையில் இன்று (ஆக.26) அவரைக் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.