தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சேர்ந்தமரம் பகுதியில், ராதாகிருஷ்ணன்- மோகனா தம்பதியினர் வசித்து வந்தனர். இருவரும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், சிறு சிறு கூலி வேலைகளுக்கு சென்று வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், இருவரும் நள்ளிரவில் ஒன்றாக சேர்ந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.
![உயிரிழந்த மனைவி மோகனா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn01tenhusbandandwifearsonvissc10063_26042022111532_2604f_1650951932_239.jpg)
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சேர்ந்தமரம் போலீசார், உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனும் மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.