தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேவுள்ள பாறைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (48). இவருக்கு கண்பார்வையில் குறைபாடு ஏற்பட்டதால் 40 வயதிற்கு மேற்பட்ட அரசு பேருந்தில் ஓட்டுநராகப் பணிபுரிபவர்கள் பெறவேண்டிய பார்வைத்திறனுக்கான தகுதிச்சான்று இவரால் பெறமுடியவில்லை.
எனவே கடந்த ஆறு மாதமாக இவருக்கு ஓட்டுநர் மற்றும் மாற்றுப்பணியும் வழங்கப்படவில்லை. கரோனா காலம் என்பதால் மாற்றுப் பணிக்கான சான்று உடனடியாக சென்னை தலைமையகத்துக்குச் சென்று பெற்றுவரவும் அவரால் முடியவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
குடும்பத்தினர் அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு (செப்.23) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த புளியங்குடி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:ஐபிஎஸ் அலுவலர்கள் பெயரில் மோசடி: குற்றவாளிகளைத் துரத்தும் போலீஸ்!