தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் இருபாலருக்கும் தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மகளிருக்கான நிலம் வாங்கும் திட்டம், விவசாயத்திற்கான விரைந்து மின் இணைப்பு பெறும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டம் இலத்தூர் விளக்கு பகுதியில் தனியார் தொண்டு பயிற்சி நிறுவனத்தில் தாட்கோ மூலம் பெண்களுக்கான தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. முதல்கட்டமாக ஆதிதிராவிடர் மாணவ-மாணவிகளுக்கு தங்கத்தின் தரம், விலை நிர்ணயம் குறித்த பயிற்சி, ஆயத்த ஆடைகளின் டிசைனிங் பயிற்சி, சுய வேலை வாய்ப்புக்கான தையல் பயிற்சி ஆகிய மூன்று பயிற்சிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின் மாணவிகளிடையே பேசிய அவர், “வாழ்க்கைக்கு கல்வி எவ்வளவு அவசியமோ, அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் திறன் மேம்பாடு வாழ்வாதாரத்திற்கு அவசியம்” என அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: திருச்சியில் கைத்தறி கண்காட்சி விழா தொடக்கம்!