ETV Bharat / state

குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்...! - மேற்குத் தொடர்ச்சி மலை

தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக குற்றால  அருவிகளில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

flood
flood
author img

By

Published : Nov 17, 2020, 8:22 PM IST

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதம் சீசன் காலமாகும். அப்போது, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்துக்கு வந்து உற்சாகமாக குளித்துச் செல்வது வழக்கம்.

இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய நிலையில், அதன் தாக்கத்தால் தென்காசி, புளியரை, மேக்கரை, வடகரை, மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த சாரல் மழையால், குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் அவ்வப்போது
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

flood

இந்நிலையில், தென்காசி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியிலும் நேற்று (நவம்பர் 16) காலை முதல் பெய்து வரும் தொடர் மழையால் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.