தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அய்யம்மாள், கணவரை இழந்து வாழ்ந்துவருகிறார். இவர் கடந்த ஆறு வருடத்திற்கு முன்பு அவருக்கு சொந்தமான நிலம் ஒன்றை காந்தி நகரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் தனபால் என்பவருக்கு 40 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.
ஆனால் அவர் 12 லட்சம் ரூபாய் மட்டுமே அய்யம்மாள் வாங்கியுள்ளார். இதனால் அய்யம்மாள் மீதி பணத்தை கேட்கும் போது, தன்னுடைய அரசியல் செல்வாக்கை வைத்து பணம் தர முடியாது என்று மிரட்டியுள்ளார். இதனையடுத்து இதுகுறித்து அய்யம்மாள், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுகுறித்து காவல் துறையினர் விசாரிக்காமால் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் மனமுடைந்த அய்யம்மாள், இன்று (ஜூலை 23) தனது நான்கு பிள்ளைகளுடன் சங்கரன்கோவில் காவல் நிலையம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் அய்யம்மாளை மீட்டு பின்னர் அவரிடம் பேச்சுவாத்தை நடத்தியுள்ளனர் .
கரோனா ஊரடங்கு என்பதால் விசாரணைக்கு காலதாமதம் ஆகிவருவதாகவும் , உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவு காவல் துறை தரப்பில் உறுதியளித்தைத் தொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டார்.
இதையும் படிங்க...மக்களின் மரணத்தை மறைத்த முதலமைச்சர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் - ஸ்டாலின்