தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளான பனையூர், அக்கரைப்பட்டி
கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், சுமார் 2000 ஏக்கரில் பயிரிட்ட மக்காச்சோள பயிர்கள் நாசமாகியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
அழுகி நீர் தேங்கி முளைத்து கருதுகள் நாசமானதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கூறியுள்ளனர். எனவே, அதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த விவசாயிகள் மனு அளித்தனர்.
அதே போல், திருவேங்கடம் தாலுகா நடுவப்பட்டி, மைப்பாரை, வரகனூர் ஆகிய ஊர்களை சேர்ந்த சுமார் 8000 ஏக்கரில் பயிரிட்ட மக்காச்சோள பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படுள்ளதாக கூறி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் முளைத்து நாசமான கதிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஹெக்டேருக்கு 30 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், உடனடியக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.