ETV Bharat / state

நடுவக்குறிச்சியில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி பூக்கள் - போதிய விலை இல்லாததால் விவசாயிகள் பாதிப்பு! - sunflower rate down

Sunflower price goes down: நடுவக்குறிச்சி பகுதியில் சூரியகாந்தி பூக்கள் போதுமான விளைச்சல் இருந்தும் நல்ல விலைக்காக விவசாயிகள் ஏங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடுவக்குறிச்சியில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்! விலைக்காக ஏங்கி நிற்கும் விவசாயிகள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 4:51 PM IST

நடுவக்குறிச்சியில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்! விலைக்காக ஏங்கி நிற்கும் விவசாயிகள்

தென்காசி மாவட்டம் நடுவக்குறிச்சி பகுதியில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பெரிய, வட்டமான தலைகளோடு, துடிப்பான மஞ்சள் இதழ்களோடு சூரியகாந்தி பூக்கள் பூத்து குலுங்கியும், நல்ல விலைக்காக பூக்களை விளைவித்த விவசாயிகள் ஏங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், நடுவக்குறிச்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில், பார்ப்பவர் கண் கவரும் வகையில் சூரியகாந்தி பூக்கள் பயிரிடப்பட்டு உள்ளது. எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட சூரியகாந்தி பூவானது அன்றாட தேவைகளில் பல்வேறு வகைகளில் பயன்படுகிறது.

மருத்துவ குணங்கள்: பார்ப்பதற்கு சூரியன் போன்று பிரகாசமாக காட்ச்சியளிக்கும் சூரியகாந்தி பூவின் விதையில், தேவையான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் E, B, மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், துத்தநாகம், செலீனியம் போன்றவை கணிசமான அளவில் உள்ளன. சூரியகாந்தி விதைகள் அதிக புரதம் உடைய பருப்பு வகையாகும். டிரிப்டோபான் எனும் சிறப்புக்குரிய அமினோ அமிலம் உள்ளதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிக உதவுகிறது.

சூரியகாந்தி பூக்களின் விதைகளில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் துத்தநாக சத்துக்கள், எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பயன்படுகிறது. பாஸ்பரஸ் சத்தானது இதய தசைகளை சுருக்கவும், சிறுநீரக செயல்களை சீராக்கவும் பயன்படுகிறது. சூரியகாந்தி எண்ணெயில் உள்ள வைட்டமின்-E சத்தானது இதயம், வாஸ்குலார், மூளை மற்றும் நரம்பு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது. இதில் உள்ள லினோலெனிக், ஓலிக் ஆகிய அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகின்றன.

சூரியகாந்தி பூவின் விதையில் இரும்பு மற்றும் நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. அவை உடலின் களைப்பை நீக்கி, உடலுக்குத் தேவைப்படும் புத்துணர்வையும், ஆற்றலையும் வழங்குகிறது. மேலும், குடல் எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சூரியகாந்தி பூவின் விதைகளில் உள்ள வைட்டமின் - E மற்றும் செலீனியம் முதலான ஆன்டி ஆக்ஸிடன்ட் சாதாரண காய்ச்சல், மலேரியா, டெங்கு போன்ற பல நோய்களை எதிர்த்து அழிக்கும் ஆற்றல் கொண்டது.

பயிரிடும் முறைகள்: சூரியகாந்தி பூவை பயிரிடும் பொழுது, பூவின் விதைக்கு ஏற்றவாறு 2 அல்லது 3 முறையாவது நிலத்தை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் பொழுது ஏக்கருக்கு 5 டன் மட்கிய தொழு உரம் மற்றும் 12.5 கிலோ நுண்ணுாட்ட கலவையை 40 கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் இடவேண்டும். மேலும், நாட்டு கலப்பையைக் கொண்டு பார்கள் மற்றும் பாத்திகளை தயார் செய்ய வேண்டும்.

உட்கொள்ளும் முறைகள்: பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை, எள், பூசணி மற்றும் ஆளி விதைகளுடன் சூரிய காந்தி விதையையும் கலந்து, உப்பு சேர்க்காமல் வறுத்து ஒரு நாளைக்கு 30 கிராம் சாப்பிடலாம். இதை சாப்பிட்ட பின்னர், தேவையான அளவு தண்ணீர் அருந்துவது உடல் நலத்திற்கு மிகவும் முக்கியமாகும்.

தென்காசி மாவட்டம், நடுவக்குறிச்சி பகுதியில் சூரியகாந்தி பூவினை பயிரிட்ட விவசாயிகளிடம் கேட்ட பொழுது, விவசாயிகள் தற்பொழுது போதுமான அளவு பருவ மழை இல்லாமல், கிணற்று நீர் பாசனத்தை கொண்டே பயிரிட்டு வருவதாகவும், ஒரு சில பகுதியில் தண்ணீர் இல்லாமல் வாடும் சூழ்நிலையில் சூரியகாந்தி பூ காணப்பட்டாலும், ஒரு சில பகுதிகளில் நல்ல விளைச்சல் கொண்டுள்ளது. இதனால் விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் என பல்வேறு விதமான எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கின்றனர்.

மேலும், ஒரு சில இடங்களில் தரம் அற்ற விதையை கொடுத்ததால் விவசாயிகள் பெரிதும் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், சுமார் மூன்று ஏக்கரில் விதை பயிரிட்டும் தற்பொழுது சூரியகாந்தி முளைக்கவில்லை என்பதால், தரமான விதையை அளிக்கவில்லை என விவசாயிகள் பெரிதும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: டி.என்.பி.எஸ்.சி தலைவரின் தகுதி என்ன? தமிழக அரசிடம் விளக்கம் கேட்ட ஆளுநர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.