தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பன்னீர் செல்வம் (60). இவர், தனது நிலத்தில் வேளாண்மை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று (ஆக. 26) மாலை அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது.
வேகமாக காற்று வீசியதில், வயலில் விவசாயம் செய்துகொண்டிருந்த பன்னீர் செல்வம் மீது மேற்பகுதியில் செல்லும் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் மட்டும் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன