உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் காற்று, தொடுதல், இருமல் மூலம் பரவுவதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கோழி இறைச்சியை உண்பதனால் கொரோனா வைரஸ் பரவுகிறது என வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள வீராணம் பகுதியில் உள்ள சிற்றாற்றில் 20-க்கும் மேற்பட்ட வாத்துகள் தண்ணீரில் உயிரிழந்து மிதந்து கிடக்கின்றன. இதனைக் கடந்த சனிக்கிழமை அடையாளம் தெரியாத நபர்கள் கொட்டி விட்டு, சென்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே, வாத்துக்கள் கொடிய நோய் தாக்கத்தினால் உயிரிழந்ததா? ரசாயனம் கலந்த தண்ணீரைப் பருகியதால் உயிரிழந்ததா? என அலுவலர்கள் விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வாத்துக்கள் உயிழந்திருப்பதைக் கண்டு, கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:கொரோனாவால் நீண்ட விடுப்பு கேட்ட மாணவன் - வைரலான கடிதம்