ETV Bharat / state

குற்றாலத்தில் திடீர் தீ விபத்து.. 50 கடைகளில் இருந்த 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்..!

Courtallam shop fire accident: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் திடீர் தீ விபத்து ஐம்பதற்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து வரும் நிலையில் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 7:44 PM IST

Updated : Aug 25, 2023, 8:56 PM IST

குற்றாலத்தில் திடீர் தீ விபத்து..
குற்றாலத்தில் திடீர் தீ விபத்து..
குற்றாலத்தில் திடீர் தீ விபத்து..

தென்காசி: குற்றாலத்தில் ஒவ்வொரு வருடமும் ஜூன் - ஜூலை மாதங்கள் தொடக்கத்தில் சீசன் களை கட்டி வருவது வழக்கம். மேலும் குற்றாலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவதும் வழக்கம். கிட்டத்தட்ட 10,000 மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் தினசரி வருகை தருவார்கள்.

அதேபோல் இந்த ஆண்டும் சீசன் களை கட்டியதோடு, குற்றாலம் பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று வாரங்களாக அருவிகளில் நீர் வரத்து குறைந்து, சீசன் இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகளில் வரத்தும் குறைந்ததால் இங்குள்ள வியாபாரிகள் கடுமையான நஷ்டத்திற்கு தள்ளப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இன்று மதியம் பிரதான அறிவியல் மெயின் அருவியை (மெயின் அருவி) சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை அணைக்கும் பணியில் தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதையும் படிங்க: Wayanad jeep Accident: பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து 9 பேர் பலி; வயநாட்டில் நிகழ்ந்த சோகம்!

இந்த தீ விபத்தில் சேதமடைந்த கடைகளில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசம் அடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சி தலைவருக்கு தகவல் அளித்ததையடுத்து, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விபத்து குறித்த காரணங்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றால சீசன் சரியாக இல்லாததால் சுற்றுலா பணிகளின் வருகை குறைந்து ஏற்கனவே வியாபாரிகள் நஷ்டத்தை சந்தித்து வந்த நிலையில், தற்போது நடந்த தீ விபத்தில் ஏற்பட்ட நஷ்டம், குற்றால அருவி சுற்றுவட்டார பகுதிகளில் தற்காலிக கடை அமைத்திருந்த வியாபாரிகள் மத்தியிலும், சுற்றுலா பயணிகள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நாங்குநேரி வன்முறைக்கு காரணம் அரசியல் கலாச்சாரமா - தலித் அறிவுசார் இயக்கத்தின் ஆய்வறிக்கை கூறுவது என்ன?

Last Updated : Aug 25, 2023, 8:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.