ETV Bharat / state

பழமையான கார் கண்காட்சியுடன் நிறைவுற்ற குற்றாலம் சாரல் திருவிழா

குற்றாலம் சாரல் திருவிழா நிறைவு நாளான இன்று பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட கார் கண்காட்சி நடைபெற்றது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தனர்

பழமையான கார் கண்காட்சியுடன் நிறைவுற்ற குற்றாலம் சாரல் திருவிழா
பழமையான கார் கண்காட்சியுடன் நிறைவுற்ற குற்றாலம் சாரல் திருவிழா
author img

By

Published : Aug 13, 2022, 10:42 AM IST

தென்காசி: குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நான் தோறும் குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மலர், பழக்கண்காட்சி, நாய் கண்காட்சி, கோலப்போட்டி, கொழு கொழு குழந்தை போட்டி ஆணழகன் போட்டி உட்பட பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிறைவு நாளான இன்று கார் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 1956 - ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட மார்கன், 1942-ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட மோரஸ் 8, 1934-ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட சார்ஜன் இண்டாள், 1947 - ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட மினி மவுத், யாஸ், போர்டு ஜீப், 1944-ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட டக் பேக், 1934-ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட கேரவன் உட்பட 33 மகிழுந்துகள் இடம்பெற்றன.

பழமையான கார் கண்காட்சியுடன் நிறைவுற்ற குற்றாலம் சாரல் திருவிழா

அதனை தொடர்ந்து கார் அணிவகுப்பு நடைபெற்றது, இதனை சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த அணிவகுப்பு குற்றாலம் அண்ணா சிலை வழியாக காசிமேஜர்புரம், ராமலயம் வழியாக மீண்டும் புறப்பட்ட இடத்தை அடைந்தது.

இதையும் படிங்க: சுதந்திர தின கட்டுரைப் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் மாளிகை பரிசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.