உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் தேவாலயங்கள், வீடுகள், தனியார் நிறுவனங்கள் என பல இடங்களிலும் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
அந்த வகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் கரோனா தொற்று தாக்குதல் காரணமாக ஊரடங்கு நிலவி வருவதால், பல விழாக்கள் கொண்டாடபடுவதிலும் சிக்கல் நீடித்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பண்டிகை நாட்கள் களைகட்ட தொடங்கியுள்ளது.
கேக்குகளை பொதுமக்கள் மும்முரமாக வாங்கு காட்சி அதன் அடிப்படையில் நாளை (டிச.25) கொண்டாடப்படவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கேக் விற்பனையானது, தென்காசி மாவட்டத்திலுள்ள பேக்கரிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பேக்கரி உரிமையாளர்கள் கூறுகையில், ”இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வென்னிலா, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி, மேங்கோ, பிளாக் பாரஸ்ட், ஒயிட் பாரஸ்ட் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட கேக் வகைகள் விற்பனைக்கு வந்துள்ளது. அவைகள் ரூபாய் 350 முதல் 1500 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நேற்று (டிச.23) முதல் ஆர்டர்களும் வர தொடங்கியுள்ளது” என்றார்.இதையும் படிங்க: கிறிஸ்தவமும் தமிழ்நாடும்!