ETV Bharat / state

பள்ளிக்கட்டடம் கேட்டு 3ஆம் வகுப்பு மாணவி கடிதம்; மேடையிலேயே நிறைவேற்றிய CM

தென்காசியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடையில், பள்ளிக்கட்டடம் வேண்டி கடிதம் எழுதியிருந்த மாணவியின் வேண்டுகோளை முதலமைச்சர் மேடையிலேயே நிறைவேற்றியுள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
author img

By

Published : Dec 8, 2022, 11:07 PM IST

தென்காசி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தென்காசி மாவட்டத்திற்கு முதல்முறையாக ரயில் மூலம் இன்று காலை 7.30 மணிக்கு வருகை தந்தார். அவரை தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து, ரயில் நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அப்போது, குற்றாலம் செல்லும் சாலையின் இருமருங்கிலும் தொண்டர்கள், மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விழாவிற்கு வந்த, முதலமைச்சர் ஸ்டாலின் முதலாவதாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கையும், தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கையும், வேளாண்மை வளர்ச்சி துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கையும் பார்வையிட்ட அவர், விழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, விழா நடைபெறும் மேடைக்கு வருகை தந்த முதலமைச்சர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை என பல்வேறு துறைகள் மூலம் சுமார் 22 கோடியே 20 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற 57 திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்தியல்துறை உள்ளிட்ட 11 துறைகளில் சுமார் 34 கோடியே 14 லட்சம் மதிப்பில் 23 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, 33 துறைகளின் வாயிலாக ஒரு லட்சத்து மூவாயிரத்து ஐம்பத்து ஏழு பயனாளிகளுக்கு, சுமார் 182 கோடியை 52 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மொத்தமாக, சுமார் 238 கோடியே 68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் இன்று ஒரே நாளில் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசியதாவது, “தென்காசி வந்தவுடன் இந்த மண்ணை போல என் மனம் குளிர்ச்சி அடைந்துள்ளது. எப்போதும் சாரல் வீசும் இந்த மண், சென்னை மாநகரத்திலிருந்து வந்த எனக்கு மிகவும் இதமாக உள்ளது. அனைத்து வளங்களையும் பெற்றுள்ள ஒரு மாவட்டம் தென்காசி.

விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்த மண் இது. பூலித்தேவருக்கு நெற்கட்டும் செவலில் மணிமண்டபம் அமைத்துக்கொடுத்தது கலைஞர் ஆட்சியில். இது அரசு விழாவா, இல்லை எங்கள் கட்சியின் மாநில மாநாடா என்று கேள்வி எழுப்பும் வகையில் இந்த விழாவினை தென்காசி மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது.

விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்

திமுக ஆட்சி தொடங்கி 19 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை தமிழ்நாடு மக்களுக்கு செய்யப்பட்டுள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்து நெஞ்சை நிமிர்த்து பதில் அளிப்பேன். ஏனென்றால் அவ்வளவு சிறப்பான திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. தென்காசி மாவட்டத்தில் மட்டும் செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்கள் பற்றி இப்போது கூறுகிறேன்.

11,490 மக்கள் குறைதீர் மனுக்கள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. 27 கோடியே 77 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், 49,900 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். 2,990 திருநங்கைகள் பலன் அடைந்துள்ளனர். இப்படி பல்வேறு சாதனைகளை தென்காசி மாவட்டத்தில் மட்டுமே சொல்லிக் கொண்டே போகலாம்.

தென்காசி மாவட்டம் வினைதீர்த்த நாடார்பட்டியைச்சேர்ந்த 3ஆம் வகுப்பு படிக்கக்கூடிய ஒரு மாணவி ஆராதனா, ஒரு கடிதம் எனக்கு எழுதினார். அதில் தான் படித்து வரும் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கேட்டிருந்தார். அவரது கோரிக்கை இந்த மேடையிலேயே நிறைவேற்றப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் எந்த நலத்திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு எதிர்க்கட்சித் எடப்பாடி பழனிசாமி புலம்பிக் கொண்டிருக்கிறார். எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம், உணர்வுப்பூர்வமாக இருக்கிறோம். தமிழகத்தை நாட்டின் தலைசிறந்த மாநிலமாக உருவாக்குவதே எங்களது குறிக்கோள்.

ஒன்றிய அரசு சார்பில் வெளியிடப்படும் புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தாலே தமிழ்நாட்டின் வளர்ச்சி தெரியும். குற்றாலத்தில் இருந்து விழா நடைபெறும் மேடைக்கு சுமார் 10 நிமிடங்களில் வந்து விடலாம். ஆனால் நான் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆனது. அதற்கு காரணம் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வழிநெடுகிலும் மக்கள் அளித்த வரவேற்பு.

திருநெல்வேலியில் இருந்து இந்த மாவட்டம் பிரிந்திருந்தாலும், தென்காசி மாவட்டத்திற்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் எனது தலைமையிலான அரசு நிறைவேற்றித் தரும்” எனத் தெரிவித்தார். இவ்விழாவில் முதலமைச்சர்ருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் வருகை தந்தனர்.

இதையும் படிங்க: 'கடந்த ஆட்சியாளர்களுக்கு தமிழ் மொழி என்றால் என்னவென்றே தெரியாது' - எழுத்தாளர் இமையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.