ETV Bharat / state

விசாரணை கைதி உயிரிழந்த வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

author img

By

Published : Jul 27, 2020, 8:04 PM IST

தென்காசி: வாகைக்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவரின் உடலை தடயவியல் மருத்துவர்கள் குழு உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை நாளைக்கு (ஜூலை 28) ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Chennai High Court Madurai branch orders adjournment of trial prisoner death case

தென்காசி மாவட்டம் வாகைக்குளம் கிராமத்தில் வசித்து வந்தவர் அணைக்கரை முத்து. இவருக்கு சொந்தமான நிலத்தைச் சுற்றி மின்வேலி அமைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரை வனத்துறையினர், விசாரணைக்காக வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அணைக்கரை முத்து திடீரென உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. வனத்துறையினர் விசாரணையின்போது தாக்கியதால் அணைக்கரை முத்து உயிரிழந்ததாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அவரது மனைவி பாலம்மாள் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், " விசாரணைக்காக அழைத்துச் சென்ற எனது கணவர் தாக்கப்பட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளார்.

ஆகவே கணவரின் உடலை மூத்த தடயவியல் மருத்துவர்கள் குழு உடற்கூறு ஆய்வு செய்து, தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் இவ்வழக்கு குறித்து அவகாசம் கோரியதையடுத்து, வழக்கு விசாரணையை நாளை (ஜூலை 28) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.