ETV Bharat / state

தமிழக கேரள எல்லையில் பாஜகவினர் சாலை மறியல்.! ஏன் தெரியுமா.? - கனிம வளம் திருட்டு

தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் கனிம வளங்கள் கொள்ளைக்கு கண்டனம் தெரிவித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழக கேரள எல்லையில் பாஜகவினர் சாலை மறியல்

author img

By

Published : Jan 4, 2023, 12:43 PM IST

தமிழக கேரள எல்லையில் பாஜகவினர் சாலை மறியல்

தென்காசி: தமிழக கேரள எல்லைப் பகுதியான கோட்டைவாசல் வழியே, தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. அதற்கு தொடர்ந்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த சூழலிலும், மீண்டும் கேரளாவிற்கு கனிம வளங்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று (ஜனவரி 4) தமிழக கேரள எல்லைப் பகுதியான கோட்டைவாசல் பகுதியில் பாஜகவினர் கனிமவளங்கள் கொள்ளைக்கு கண்டனம் தெரிவித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அவ்வழியாக செல்லும் போக்குவரத்து சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டது.

திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் சரக்கு லாரிகளும், ஐயப்ப பக்தர்கள் வாகனங்களும் வரிசை கட்டி நின்றது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வாகன நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் கல்வீச்சு - மேற்கு வங்கத்தில் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.