தென்காசி: குற்றாலம் அருவிகளில் கரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுமார் எட்டு மாதங்கள் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் கடந்த 20ஆம் தேதி தான் மீண்டும் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக வரும் 31ஆம் தேதி முதல் 2ஆம் தேதி வரை குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து இன்று (டிச.27) ஆட்சியர் கோபால சுந்தரராஜன் வெளியிட்ட அறிவிப்பில்,
“தொற்று நோய் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி ஆகிய அருவிகளில் குளிக்க சுற்றுலா தலங்களில் வரும் 31ஆம் தேதி முதல் ஜன 02ஆம் தேதி வரை பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதித்து உத்தரவிடப்படுகிறது.
பேரூராட்சி நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டி கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: Competitive examination: அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி