தென்காசி மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள வடகரை, அச்சன்புதூர், செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்டப் பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தார்களை குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள வாழைத்தார் சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருவர்.
தற்போது இப்பகுதியில் பிசான சாகுபடி மேற்கொண்டு வரும் நிலையில் வெளிமாவட்டங்களான தேனி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள், இந்தச் சந்தைக்கு விற்பனைக்காக வாழைத்தார்களை கொண்டு வருகின்றனர்.
இன்னும் ஓரிரு தினங்களில் பொங்கல் பண்டிகை வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வாழை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
வாழைத்தார் விலை விவரம்
செவ்வாழை ஒரு தார் 800 ரூபாய்க்கும், வயல் வாழை ஒரு தார் 350 ரூபாய்க்கும், கற்பகவல்லி ஒருத்தார் 500 ரூபாய்க்கும், ரோபஸ்டா ஒரு தார் 250 ரூபாய்க்கும், கோழிகூடு ஒரு தார் 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
பண்டிகை காலங்களில் எப்போதும் நடைபெறும் இவ்விற்பனை இந்த ஆண்டு தொடர் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வாழை விவசாயிகள் வேதனைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரோட்டா உண்ணும் போட்டி