தென்காசி: ஹஜ் பெருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையாக இன்று (ஜூலை 21) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது.
கடந்தாண்டு கரோனா ஊரடங்கு காரணமாக இஸ்லாமியர்களுக்குப் பள்ளி வாசல்களில் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இந்தாண்டு கரோனா ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
உலக அமைதிக்காகப் பிரார்த்தனை
அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் ஜன்னத்துல் பிர்தெளஸ் ஜூம்மா பள்ளிவாசல், மரைக்காயர் ஜூம்மா உள்ளிட்ட பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியுடன் சிறப்புத் தொழுகை நடத்தினர்.
மேலும் இந்நாளில் உலக அமைதிக்காகப் பிரார்த்தனை செய்ததுடன், புத்தாடை அணிந்து, அசைவ உணவுகளைப் பலருக்கும் பகிர்ந்தளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக இஸ்லாமிய சகோதர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'வாஜ்பாய், அத்வானி அறை நட்டாவுக்கு ஒதுக்கீடு!'