ETV Bharat / state

சோஷியல் மீடியாவை பாதுகாப்பாக கையாள்வது எப்படி? - கடையநல்லூரில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி!

கடையநல்லூரில் சமூக வலைதளங்களை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் ஜேசிஐ பெஸ்ட் பள்ளியின் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

awareness about social networking sites
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சமூக வலைதளங்களை கையாளுவது குறித்த விழிப்புணர்வு
author img

By

Published : Aug 2, 2023, 1:21 PM IST

சோஷியல் மீடியாவை பாதுகாப்பாக கையாள்வது எப்படி?

தென்காசி: தென்காசி மாவட்டம், ஜேசிஐ பெஸ்ட் பள்ளியின் அமைப்பு மூலமாக அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தற்போது உள்ள சமூக வலைத்தளங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும், தங்களுடைய இலக்கு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் எனவும், படிக்கும் பொழுது தங்களுடைய கனவு லட்சியங்களை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், தேர்வு நேரங்களில் எவ்வாறு இருக்க வேண்டும் என பல்வேறு விதமான விஷயங்களை விளக்கும் விதமாக அனைத்து பள்ளிகளுக்கும் நேரடியாகச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அந்த வகையில், இன்றைய காலக்கட்டத்தில் பள்ளி குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் பல்வேறு விதமான சமூக வலைத்தளங்களில் அகப்பட்டு வெளியே வர முடியாத சூழலில் தவித்து வருகின்றனர் அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியிலும், குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்தவுடன், அடுத்தகட்ட நிலைமைக்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை விளக்கும் விதமாக சில விழிப்புணர்வுகள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. குறிப்பாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும், இந்த காலகட்டத்தில் தங்களுடைய எண்ணங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் மற்றும் தங்கள் கனவு லட்சியத்தை எவ்வாறு அடையலாம் என்பதற்கான வழிமுறைகளை மாணவ, மாணவிகளுக்கும் அறிவுரையாகக் கொடுக்கப்பட்டது. இன்றைய சமூக வலைத்தளங்களை எவ்வாறு நாம் பயன்படுத்த வேண்டும்? எனவும், படிக்கும் போது நம்முடைய கனவு லட்சியங்களை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும்? எனவும், கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் சொன்னதை நினைவுகூர்ந்து, அவர் வாழ்ந்து காட்டிய சரித்திரத்தை மாணவ, மாணவிகளுக்கு நிகழ்ச்சியில் அறிவுரையாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் படிக்கும் காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும், எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது எனவும், பள்ளியில் படிக்கும் பொழுது தங்களின் மதிப்பெண்கள் போன்ற விஷயங்களில் தேவையில்லாமல் மனக்குழப்பங்கள் வருவதால் மாணவ, மாணவிகள் பல்வேறு விதமான முடிவுகளை எடுக்கின்றனர். இதனைப் போக்கும் வகையில் நிகழ்ச்சியில் சுமார் ஒரு மணி நேரம் அளவில் விழிப்புணர்வும், அறிவுரையும் வழங்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட ஜேசிஐ அமைப்பு சார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:நடுவானில் விமானத்தில் புகை பிடித்த பயணி கைது.. சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.