ETV Bharat / state

தென்காசியில் நீதிமன்றம் சென்று திரும்பிய இளைஞர் வெட்டி கொலை: கொலையாளிகளுக்கு போலீசார் வலை - கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு

தென்காசி அருகே நீதிமன்றம் சென்று திரும்பியவரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 17, 2023, 10:10 PM IST

தென்காசி: தென்காசி அருகே கிடாரக்குளம் பகுதியில் நீதிமன்றம் சென்று திரும்பிய இளைஞரை அடையாளம் தெரியாத கும்பலினர் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே வடக்கு கிடாரகுளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி என்பவரின் மகன் மணிகண்டன்(23). இவர் ஜேசிபி ஓட்டுநர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு நாச்சியார்புரம் அருகே காட்டுப்பகுதியில் ஆடு திருடப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இருதரப்பினர் இடையே நடந்த தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மணிகண்டனும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.

இந்த நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக தென்காசி நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று (ஏப்.17) வீட்டில் இருந்து மணிகண்டன் காலை தென்காசி நீதிமன்றத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர், நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த நிலையில், மீண்டும் மணிகண்டன் கிடாரக்குளம் திரும்பியுள்ளார். அப்போது கிடாரக்குளத்தில் பாலம் ஒன்றின் அருகே அரிவாளுடன் மறைந்து இருந்த ஒரு கும்பல் இரு இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டனை வழிமறித்து சராமரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் நிலை தடுமாறிய மணிகண்டன் பைக்கில் இருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார். அப்போது அந்த கும்பல் மணிகண்டனை ரோட்டில் துரத்திச் சென்று சாலையோரம் உள்ள கடை அருகே அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது. இதனைத்தொடர்ந்து, ரோட்டில் ரத்த வெள்ளத்தில் மிதந்த மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவை, குறித்து தகவல் அறிந்ததும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், ஊத்துமலை ஆய்வாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த 2020ஆம் ஆண்டில் நாச்சியார்புரம் விலக்கு காட்டுப்பகுதியில் ஆடு திருடிபோது கிடாரக்குளம் நெட்டூரை சேர்ந்த இரண்டு கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் நெட்டூரை சேர்ந்த ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டதும்; இந்த கொலைக்கு பழிக்குப் பழியாக தற்போது கிடாரக்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ஆலங்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தலைமையில், தனிப்படை அமைத்து கொலை செய்தவர்களைத் தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இவ்வாறு, பட்டப்பகலில் நடுரோட்டில் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: அடிக் அகமது கொலை வழக்கு - துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் குடும்பம் தலைமறைவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.