ETV Bharat / state

வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சிறப்பு முகாம்: மக்களுக்கு அறிவுரை!

சிங்கிலிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் வேளாண்மை கல்லூரி மாணவ, மாணவிகளின் சார்பில் நாட்டு நலத்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

author img

By

Published : Jan 5, 2023, 4:38 PM IST

வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சிறப்பு முகாம்

வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சிறப்பு முகாம்: மக்களுக்கு நாட்டு நலத்திட்ட அறிவுரை!

தென்காசி: கடையநல்லூர் அருகே புன்னையாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கிலிப்பட்டி பகுதியில் வாசுதேவநல்லூர் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவ, மாணவிகளின் நாட்டு நலத்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சிங்கிலிப்பட்டி புன்னையாபுரம் கவுன்சிலர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

மேலும் தங்கள் ஊராட்சி நாட்டு நலத்திட்டத்திற்கு வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு நன்றி தெரிவித்து, சிங்கிலிப்பட்டி பகுதியை பசுமை நிறைந்த பகுதியாக மாற்றிட வேண்டும் எனவும், அதற்கு ஊராட்சித் தலைவர் என்ற முறையில் முழு ஒத்துழைப்பு வழங்குவேன் எனவும் அங்கு வந்திருந்த ஊராட்சி தலைவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து மாணவிகள் பேசும்பொழுது, 'முதற்கட்டமாக சிங்கிலிப்பட்டி பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பண்ணை தோட்டம் அமைத்து, அதில் கத்தரிக்காய், தக்காளி உள்ளிட்ட செடிகளை நட்டு வைத்துள்ளோம். அந்தச் செடிகள் அனைத்தையும் நன்றாக அப்பகுதியில் உள்ள மக்கள் பராமரிக்க வேண்டும்’ எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

சிங்கிலிப்பட்டி சாலையில் உள்ள செடி கொடிகளை அகற்றி அப்பகுதியை சுத்தப்படுத்தி, பொதுமக்கள் அரசு வழிமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கூறினர். அனைத்து பொதுமக்களும் குப்பையை நடுரோட்டிலோ அல்லது நடக்கும் நடைப்பாதையிலோ போடக்கூடாது எனவும்; ஊராட்சி சார்பாக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் மட்டுமே போட வேண்டும் எனவும் மாணவிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் சாலை வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்றும்; அரசின் உத்தரவின்படி கட்டாயம் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது எனவும் பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

மண் வளத்தைப் பெருக்கிட மண்ணில் என்னென்ன சத்துகள் உள்ளன என சிங்கிலிப்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மாணவிகள் எடுத்துக் கூறினர். இதனைத்தொடர்ந்து 7 நாட்கள் அந்த கிராமத்தில் முகாமிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதி மக்களுக்கு செய்து கொடுப்பதாகவும், தனியார் வேளாண்மை கல்லூரி மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நெல்லை ராதாபுரத்தில் 5,220 வாக்காளர்கள் நீக்கம் - ஆட்சியர் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.