சென்னை: விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் 6ஆம் தேதி சென்னை மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்நிகழ்ச்சி தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சென்னை விமானப்படைத்தளத்தைச் சேர்ந்த கேப்டன்கள் சித்தீஷ் கார்த்திக் மற்றும் அஜய் சாரதி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது, “சென்னையில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானங்கள், இந்திய விமானப்படையின் விமானங்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் கலந்து கொள்கிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் முதல் முறையாக விமான சாகச நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பது பெருமிதம் கொள்கிறோம். தமிழ்நாட்டை சேர்ந்த விமான கேப்டனாக கலந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம்.
கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெறும் பொழுது கல்லூரி பயின்றவர்கள், தற்பொழுது விமான சாகசத்தில் கலந்து கொள்வது பெரும் மகிழ்ச்சி மற்றும் பெருமையாக இருக்கிறது. இந்த விமான சாகச நிகழ்ச்சி பார்க்கும் இளைஞர்கள் அனைவருக்குமே இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஆர்வம் அதிகமாக ஏற்படும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் உள்ள விமானப்படைக்கு சொந்தமான பல்வேறு வகைகளைச் சேர்ந்த 72 விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறது.
இதையும் படிங்க: துப்பாக்கி சுடும் போட்டி; 7 பதக்கங்களை அள்ளிய தென் மண்டல காவல் அணி! - Shooting competition
போர் விமானங்கள் மற்றும் இந்திய ராணுவ விமானங்கள் என அனைத்து ரகத்திலும் ஒன்று சாகச நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறது. தற்பொழுது சென்னையில் நடைபெறும் சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழுவினர்தான் உலககோப்பை நிகழ்ச்சியில் சாகச நிகழ்ச்சியை நடத்தியது. அதைவிட தற்பொழுது சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் 3 வண்ண கலர் உடன் பிரம்மிக்கும் வகையில் சாகசம் நடைபெறும்.
உலகத்திலேயே அமெரிக்கா, கனடா, இத்தாலி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு அடுத்து இந்தியாவில் தான் விமான சாகசம் உள்ளது. 19 ஆண்டுகளாக இந்திய விமானப்படையில் இருந்த போதிலும், தாய் மண்ணில் விமான சாகசம் மேற்கொள்வது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த விமான சாகச நிகழ்ச்சிக்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்தால், உலக சாதனையை முறியடிக்கும்.
அதற்கு அது மெரினா கடற்கரை நமக்கு சாதகமாக இருக்கும். பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு, இந்நிகழ்ச்சியை உலக சாதனை நிகழ்ச்சியாக்க வேண்டும்” என்று கூறினர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்