ETV Bharat / state

ஆடி அமாவாசை எதிரொலி.. குற்றாலத்தில் குவிந்த மக்கள்! - புனித நீராடி

ஆடி அமாவாசை தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி, தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக குவிந்து வருகின்றனர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு ....குற்றாலத்தில் குவிந்து வரும் மக்கள்

author img

By

Published : Aug 16, 2023, 11:10 AM IST

ஆடி அமாவாசையை முன்னிட்டு ....குற்றாலத்தில் குவிந்து வரும் மக்கள்

தென்காசி: அமாவாசை என்பது இந்துக்களின் முக்கிய விரத நாளாகும். மேலும் அமாவாசை தினத்தில் விரதம் இருந்து மறைந்த முன்னோர்களை வழிபட்டால், அவர்களுடைய அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையன்று முன்னோர்களுக்கு பிதுர் கடன் கொடுத்தால், அது அவர்களை நேரடியாக சென்றடையும் என்பதும் நம்பிக்கை.

அந்த வகையில், ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் மிகுந்த சிறப்பு வாய்ந்த நாட்களாக கருதப்படுகின்றன. அதன்படி, இந்த வருட ஆடி மாதத்தில் 2 அமாவாசை உள்ளது. இந்நிலையில், ஆடி 1ஆம் தேதி முதல் அமாவாசை முடிந்த நிலையில், இன்று 2-வது அமாவாசை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக, ஒரு மாதத்தில், ஜென்ம நட்சத்திரம் இரண்டு தினங்கள் வந்தால், 2-வது நட்சத்திரத்தையே நாம் ஜென்ம நட்சத்திரமாக கருத வேண்டும் என ஐதீகம் கூறுவதால் 2-வதாக வரும் அமாவாசையையே ஆடி அமாவாசையாக கருதி இன்று ஏராளமானோர் தங்களது முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, ஆடி அமாவாசை தினத்தன்று புண்ணிய நதிகள், அருவிகள், கடல்கள் உள்ளிட்டவைகளுக்கு சென்று அங்கு புனித நீராடி, கருப்பு எள், நல்லெண்ணெய், பிண்டம் உள்ளிட்டவைகளை படைத்து தங்களது முன்னோர்களை வழிபட்டு பின்னர் பிண்டங்களை நதி, ஆறு, கடல்களில் கரைப்பது வழக்கம். அந்த வகையில், இன்று ஆடி அமாவாசை தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி, தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக குவிந்து வருகின்றனர்.

குறைவாக விழும் தண்ணீரில் நீண்ட நேரம் காத்திருந்து புனித நீராடியும், தங்களது முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக எள்ளும், எண்ணெய்யும் படைத்து சிறப்பு வழிபாடு நடத்தி தர்பணம் கொடுத்து குற்றால அருவிக்கரையில் பிண்டங்களை கரைத்தும் வருகின்றனர்.

இதனையடுத்து இன்று (ஆகஸ்ட். 16) காலை முதலே குடும்பம், குடும்பமாக குவிந்த பொதுமக்கள், குற்றால அருவிக்கு வருகை தந்து முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தி தர்பணம் கொடுத்தும், அருவிக் கரையை ஒட்டி அமைந்துள்ள கடைகளில் உணவு பொருள்கள் மற்றும் பழங்களை வாங்கி தானம் வழங்கி வருகின்றனர்.

மேலும் சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி பகுதிகளில் தண்ணீர் வரத்தானது குறைவாகவே காணப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் சாரல் மழை பெய்தால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நாங்குநேரி சம்பவத்திற்கு யார் காரணம்? இளஞ்சிறார் குற்றத்திற்கு சினிமா தான் காரணமா? குற்றவியல் துறை கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.