ETV Bharat / state

குற்றாலம் அருவியில் எம்எல்ஏ திடீர் ஆய்வு; கோரிக்கை வைத்த பெண் சுற்றுலாப் பயணி - குற்றாலம்

குற்றாலம் அருவியை ஆய்வு செய்த எம்எல்ஏவிடம் பெண் சுற்றுலா பயணி ஒருவர் பெண்களுக்கான அடிப்படை வசதி குறைபாடுகளை சரி செய்யும் படி கோரிக்கை வைத்தார்.

குற்றாலம் அருவியில் எம்எல்ஏ திடீர் ஆய்வு; கோரிக்கை வைத்த பெண் சுற்றுலா பயணி

author img

By

Published : Oct 4, 2022, 7:40 PM IST

தென்காசி: குற்றாலத்தில் சில மாதங்களுக்கு முன்பு மெயின் அருவி பகுதியில் குளித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அதில் தடாகத்தில் விழுந்த இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த தடாகம் பகுதியை சீரமைக்க வேண்டும் என்று தென்காசி எம்எல்ஏ பழனி, சுற்றுலாத் துறை அமைச்சருக்குத் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று சுற்றுலாத்துறை சார்பில் சுமார் 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தடாகம் பகுதியை எவ்வாறு சீர்படுத்த வேண்டும் என்று எம்எல்ஏ பழனி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த பெண் சுற்றுலாப்பயணி ஒருவர் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும்; உடைமாற்றும் அறை சேதம் அடைந்துள்ளது என்றும்; கழிப்பிட வசதிகள் எதுவும் இல்லை என்றும் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, விரைவில் அனைத்துப் பணிகளும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்எல்ஏ தெரிவித்தார்.

குற்றாலம் அருவியில் எம்எல்ஏ திடீர் ஆய்வு; கோரிக்கை வைத்த பெண் சுற்றுலா பயணி

இதையும் படிங்க: நெல்லையில் மூடப்பட்டிருந்த கல்குவாரிகள் செயல்பட அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.