ETV Bharat / state

குடும்பப் பிரச்னையில் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்.. தென்காசியில் நடந்தது என்ன - tenkasi women suicide

தென்காசியில் குடும்பப் பிரச்னை காரணமாக இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பப் பிரச்னையில் குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்

author img

By

Published : Jan 4, 2023, 3:22 PM IST

தென்காசி: வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் - மீனா தம்பதியினர். முருகன் தனியார் ப்ளூ மெட்டல் நிறுவனத்தில் கூலி விலை செய்து வருகிறார். இருவருக்கும் காதல் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், பிரியா (7) மற்றும் மோனிகா (1) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின் முருகன் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வரும்போது இரவில் மனைவி, குழந்தை யாரும் இல்லாததால் சுற்றுப்பகுதியில் தேடியுள்ளார். அப்போது அருகில் உள்ள கிணற்றில் குழந்தைகளுடன் மீனா மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் உதவியுடன் மீனா மற்றும் குழந்தையின் உடல்களை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இது குறித்து வாசுதேவநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தாயும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.