ETV Bharat / state

Tenkasi:டாக்டர் வீட்டில் 102 சவரன் நகை கொள்ளையடித்த குடும்பம்: கூண்டோடு சிக்கியது எப்படி?

தென்காசி அருகே வாசுதேவநல்லூரில் டாக்டர் வீடு உள்ளிட்டப் பல வீடுகளில் 102 சவரன் நகை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 25, 2023, 5:18 PM IST

Updated : Jul 25, 2023, 7:50 PM IST

தென்காசி: டாக்டர் வீட்டில் 102 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை அதிரடியாக இன்று (ஜூலை 25) கைது செய்த தனிப்படை போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தனிப்படை போலீசாரின் விசாரணையில் உறவினரின் வீட்டிற்கு வந்த நிலையில், நள்ளிரவில் தொடர்ச்சியாக, அடுத்தடுத்து நான்கு வீடுகளில் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் எஸ்.டி. நகர் புதுமனை 3-வது தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (38). சித்தா டாக்டரான இவர் அப்பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த 19ஆம் தேதி இவரது வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் இவரது வீட்டினுள் நுழைந்து பீரோவில் இருந்த 102 சவரன் தங்க நகைகள், 263 கிராம் வெள்ளி உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் அவர் அளித்தப் புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து சார்பு காவல் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதோடு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த 4 பேரில் வாசுதேவநல்லூர் அருகே தலையணை பகுதியில் வசிக்கும் ஒருவரை பிடித்தனர்.

இதையும் படிங்க: காதல் விவகாரத்தில் இளைஞர் ஆணவக்கொலை? - நெல்லையில் நீதி கேட்டு வந்தவர்கள் கைது!

அவரிடம் நடத்திய விசாரணையில், இக்கொள்ளையில் ஈடுபட்டது அவரது உறவினர்களான தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகா மலைதாங்கி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்ற நிக்கல்சன் (50), அவரது மனைவி லலிதா (45), அவர்களது மகன் நவீன்குமார் (27) ஆகியோர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தருமபுரியில் பதுங்கியிருந்த 3 பேரையும் கைது செய்தனர்.

சம்பவத்தன்று மணிவண்ணன் வீட்டில் கொள்ளையடிப்பதற்கு முன்பாக அதே தெருவில் 3 வீடுகளின் கதவை உடைத்து பணம் திருடியுள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டனர். இதையடுத்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்த 165 கிராம் நகையை வாசுதேவநல்லூர் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல, 120 கிராம் நகைகளை தொடர்ச்சியாக, 4 வீடுகளில் கொள்ளையடித்ததை போலீசார் கண்டுபிடித்தனர். ஆகவே, இப்பகுதியில் கொள்ளை சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமராக்களை அமைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சொத்தை அபகரிக்க காவல் ஆய்வாளர் முயற்சி?... தேனியில் பெண் பரபரப்பு புகார்!

Last Updated : Jul 25, 2023, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.