ETV Bharat / state

புளியங்குடி வனப்பகுதியில் 2 வயது ஆண் குட்டியானை உயிரிழப்பு! - யானை உயிரிழப்பு

Elephant death: புளியங்குடி வனப்பகுதியில் 2 வயது குட்டியானை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 வயது ஆண் குட்டியானை உயிரிழப்பு
2 வயது ஆண் குட்டியானை உயிரிழப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 12:09 PM IST

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி வனப்பகுதியில் இரண்டு வயதான ஆண் குட்டி யானை, உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர், பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு குட்டி யானையை நல்லடக்கம் செய்தனர்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் அதிகப்படியான கனமழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் பாதுகாப்பு இன்றி காணப்படுகிறது. கனமழை காரணமாக வனவிலங்குகளுக்கு உடல் நலக்குறைபாடும் ஏற்படுகிறது.

இதனால் வனத்துறையினர், புளியங்குடி, சிவகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று (ஜன.9) சங்கரன்கோவில் வனச்சரகத்திற்கு உட்பட்ட வாசுதேவநல்லூர், செல்லுப்புளி பீட் வட்டக்கன்னி பகுதியில், வனப்பணியாளர்கள் மற்றும் வனக் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பொழுது, அப்பகுதியில் குட்டியானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இது குறித்த தகவலை வனச்சரகர்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து உள்ளனர். பின்னர், இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், இறந்தது இரண்டு வயதான ஆண் குட்டியானை என்று உறுதி செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, வனச்சரக அலுவலர்களால், மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, அங்கு வந்த வன உயிரினக் காப்பாளர்கள், மழையை பொருட்படுத்தாமல், ஆண் குட்டி யானையை பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து உள்ளனர். பின்பு, அப்பகுதியிலேயே ஆண் குட்டி யானையை நல்லடக்கம் செய்தனர்.

இதையும் படிங்க: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.