சிவகங்கை: இளையான்குடி அருகே குமாரகுறிச்சி கிராமத்தில் நேற்று முன்தினம் (அக்.13) முளைப்பாரி திருவிழா கொண்டாடப்பட்டது.
அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது போதையில் மாணவிகள் செல்லும் தனியார் கல்லூரிப் பேருந்தை வழி மறித்தனர்.
பின்னர், அந்த இளைஞர்களுள் ஒருவர் 'மல்லாக்க படுத்துக்கிட்டு விட்டத்த பாக்குறதுல என்ன ஒரு சுகம்' என வடிவேல் பாணியில் வானத்தைப் பார்த்தபடியே தரையில் படுத்தார்.
மற்றொருவர் பீர் பாட்டிலை சாலையில் வைத்து கும்மி அடிக்க, இன்னொருவர் அதற்கு நடனமாடியது பார்ப்போருக்கு ஒரே கூத்தாக இருந்தது.
போதையில் ரகளை செய்த இளைஞர்களுக்கு போலீஸ் வலை
இந்த வீடியோவை அந்த இளைஞர்கள் சமூக வலைதளங்களில் மாஸ் காட்டுவதற்காகப் பதிவிட்டனர்.
இந்த வீடியோ வைரலாகப் பரவியதையடுத்து, மாணவிகள் பேருந்தை மறித்து முட்டியைக்காட்டி ஆடிய இளைஞர்களைப் பிடிக்க காவல் துறை முடிவு செய்தது.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மது போதையில் ரகளையில் ஈடுபட்ட அந்த நடன கலைஞர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே பைக் வீலிங் செய்த இளைஞர்கள்