ETV Bharat / state

உலக சுற்றுலா தினம் - கீழடியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி - கீழடியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி

சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் நடைபெற்றுவரும் அகழாய்வு பணிகள், அங்கு எடுக்கப்பட்ட பொருட்களை பார்வையிட இன்று ஒருநாள் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் கீழடிக்கு வந்து பார்வையிட்டுச் சென்றனர்.

கீழடி
கீழடி
author img

By

Published : Sep 26, 2021, 8:34 PM IST

சிவகங்கை: கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் அகழாய்வு பணிகள், அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பார்வையிட கீழடியில் பொது மக்களுக்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருகை தந்து கீழடியை சுற்றிப்பார்த்துச் சென்றனர்.

கொந்தை, கீழடி பகுதியில் கிடைத்த மண்பாண்ட பொருட்களான சுடுமண் முத்திரை, நம் முன்னோர்கள் நெசவுக்கு பயன்படுத்திய தக்களி என்னும் ‌நூல் கோர்க்கும் கருவி, பெண்கள் காதில் அணியும் அழகிய வேலைப்பாடுகள் உடைய சுடுமண் காதணிகள், கூர்மையான பென்சில் போல் வடிவம் கொண்ட எலும்பு புள்ளி, சுடுமண் விளையாட்டு ஆட்டக்காய்கள், சங்கு வளையல்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டது.

இது சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பார்வையாளர்கள் வருத்தம் தெரிவித்தனர். இப்பகுதியில் கிடைக்கப்பெற்ற அனைத்து பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கூறினர்.

பொருட்களை பார்க்க வந்த மக்கள் அகழாய்வு பகுதிகளில் நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். மேலும், தென்னிந்திய சுற்றுலா முகவர் சங்கம் சார்பில் தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் சிலம்பாட்டம், வாள் சண்டை ஆகியவை பொதுமக்களுக்கு செய்து காட்டப்பட்டது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சிக்கென தனித்துறை வேண்டும் - பாரதிதாசனின் பேரன் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.