சிவகங்கை: விற்பனை செய்பவர்கள் அதனைச் சுகாதாரமற்ற முறையில் தயாரித்து மக்களிடம் அளிக்கின்றனர். இதுபோன்ற பல காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்திவருகின்றன.
சமீபத்தில் சென்னை மாவட்டத்தில் அம்பத்தூரில் அப்பகுதி இளைஞர்கள் அவ்வழியே சென்ற பானிபூரி விற்பனையாளரிடம் பானிபூரி வாங்கி உண்டனர். பானிபூரியை வட மாநிலத்தவர் தயார்செய்து தருவதற்கு முன்பு அப்பகுதி இளைஞர்கள் தாங்களே உருளைக்கிழங்கை எடுத்து பானிபூரியில் வைத்து உண்ண ஆரம்பித்தனர்.
அப்போது, ஒரு இளைஞர் பானிபூரியை உண்ண சென்றபோது, அதிலிருந்த உருளைக்கிழங்கு மசாலா துர்நாற்றம் வீசியது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் அதனை சோதனைச் செய்தபோது அதில் புழு இருந்தது தெரியவந்தது. ஆத்திரமடைந்த இளைஞர்கள், அப்பகுதி மக்கள் பானிபூரி விற்ற வடமாநிலத்தவரை கட்டுக்கம்பியில் கட்டிவைத்து உதைத்தனர்.
அதேபோல் தற்போது காரைக்குடியில் ரஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் வடமாநிலத்தவர் ஒருவர், அதனை பேக் செய்யும்போது ரஸ்க்குகளை நாக்கால் நக்கி, காலால் தேய்த்து விளையாடும் காணொலி காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகிவருகிறது. இதனை பார்க்கும் போது அதனை வாங்கும் எண்ணமெ மக்களுக்கு வராத அளவிற்கு அந்த வீடியோ உள்ளது.
இதனைச் சரிசெய்ய கோரிக்கைகள் அதிகரித்த காரணத்தால், காரைக்குடியில் உள்ள அனைத்து ரஸ்க் தொழிற்சாலைகளிலும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தீவிர சோதனை செய்தனர்.
அப்போது ரஸ்க்குகளை தரையில் கொட்டி பேக்கிங் செய்வது தெரியவந்தது. பின்னர் 200 கிலோ ரஸ்க்குகளை குப்பையில் கொட்டிய அலுவலர்கள், அந்தத் தொழிற்சாலைக்குச் சீல் வைத்துள்ளனர். தற்போது இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: காந்தியின் சகிப்புத்தன்மை நமது பாதையாகட்டும் - ஸ்டாலின்