ETV Bharat / state

சாணத்தின் மூலம் விபூதி - தொழில் செய்து அசத்தும் முதியவர் - சிவகங்கையை சேர்ந்த முதியவர் சம்பத்.

சிவகங்கை: மாட்டு சாணத்தின் மூலம் விபூதி தயாரிப்பதை பெரும் தொழிலாய் செய்து லாபம் ஈட்டி வருகிறார் சிவகங்கையை சேர்ந்த முதியவர் சம்பத்.

சாணத்தின் மூலம் விபூதி - தொழில் செய்து அசத்தும் முதியவர்

author img

By

Published : Oct 5, 2020, 10:19 AM IST

தொழில் தொடங்குவதற்கும், உழைப்பதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதற்கு உதாரணமாக வாழ்ந்துவருகிறார் சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரத்தை சேர்ந்த முதியவரான சம்பத். இந்த வயதிலும் ஓய்வின்றி உழைக்கும் இவர் நாட்டு மாடு சாணத்தின் மூலம் விபூதி தயாரித்து முன்மாதிரி தொழில் முனைவோராகத் திகழ்கிறார். தன் வாழ்வியலை இயற்கை சார்ந்து அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அலாதியான நாட்டம் கொண்டவர். இதனால், அரசுத்துறையில் ஏலம் எடுக்கின்ற அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் பணியிலிருந்து விலகி, சொந்தமாய் விபூதி தொழிலை செய்து வருகிறார்.

சாணத்தின் மூலம் விபூதி - தொழில் செய்து அசத்தும் முதியவர் சம்பத்

சாணத்தை சேகரித்து அவற்றை உருண்டையாக்கி ஈரப்பதமின்றி காயவைத்து பின்பு தீயிலிட்டு பஸ்பமாக்குகிறார். விபூதியாக அதனை மாற்றுகின்ற காலம் ஏறக்குறைய ஒரு மாதம். ஒரு கிலோ விபூதி ரூபாய் 500க்கு விற்பனை செய்துவருகிறார். வெளிமாவட்டங்களில் இருந்து தன்னை அணுகுபவர்களுக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கிறார். இந்த தொழிலை செய்வதற்கு இவரிடம் 20 தொழிலாளர்கள் இருக்கின்றனர்.

விபூதி
விபூதி

இதுகுறித்து சம்பத் கூறுகையில், "என்னுடைய முன்னோர்களின் வழியில் நானும் இயற்கை விவசாயத்தை சார்ந்து வாழ்வதில் பெருமை கொள்கிறேன். இப்போதெல்லாம் தூய்மையான நாட்டு மாட்டு சாணத்தில் இருந்து எடுக்கப்பட்ட விபூதி என்பது மிகக் குறைவாகவே விற்பனைக்கு உள்ளது. வியாபாரத்திற்காக எதையும் செய்கிறார்கள். ஆகையால் அந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக நானே சொந்தமாக இரண்டு நாட்டு மாடுகளை வாங்கி அவற்றின் மூலமாக இந்த விபூதி தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டு வருகிறேன். முதலில் என்னுடைய தேவைக்காக மட்டுமே விபூதியை தயாரித்து வந்தேன். இதன் பலன் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இதனை தொழிலாக விரிவுப்படுத்தியுள்ளேன்.

இதற்காகவே தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பாரம்பரிய நாட்டு மாடுகளை வாங்கி வளர்க்கத் தொடங்கினேன். தற்போது 50 மாடுகள் உள்ளன. இதில், காங்கேயம் இன மாடு உள்ளிட்ட எட்டு வகை இன மாடுகள் உள்ளன. மாடுகளின் சாணத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் 400லிருந்து 450 கிலோ விபூதியை பஸ்பம் செய்து எடுக்கிறேன். இந்த தொழிலில் எனக்கு பெரிய அளவில் லாபம் இல்லை என்றாலும் ஆன்மிக பணியாக கருதி செய்துவருகிறேன்" என்றார்.

ராமேஸ்வரம், திருச்செந்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் சம்பத் பண்ணையில் தயாரிக்கப்படும் நாட்டு மாட்டு சாணத்திலான விபூதியே பெரும்பாலும் விற்பனைக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 16 போட்டியாளர்களுடன் கலக்கலாகத் தொடங்கிய 'பிக்பாஸ் 4'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.