சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி அருகே செயல்பட்டுவரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை நேற்று (அக்.21) மாநில தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் தொழிற்பயிற்சி நிலையத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மாநிலம் முழுவதும் உள்ள 90 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து அதற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைச் செய்து தர முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டர். அவர் உத்தரவின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவர் தொழிற்பயிற்சி நிலையங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும், புதிதாக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் பயிற்சிகளை உருவாக்கிக் கொடுக்க உள்ளார்" எனத் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.