சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமுமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி நேற்று சிவகங்கை அருகே மதகுபட்டி, அலவாகோட்டை, கட்டாணிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கிராம மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
"காங்கிரஸ் வேட்பாளர் என்ன படித்திருந்தாலும் சிவகங்கை மக்கள் மனதை படித்திருக்க வேண்டும். அந்த தகுதி எனக்கு மட்டும்தான் இருக்கிறது.
இன்னொருவர் களத்தில் இருக்கிறார்; அவர் எங்கு வந்தாலும் பெரியார் சிலைக்கு கூட பாதுகாப்பு போட வேண்டிய நிலை ஏற்படும். அவரது தகுதி அவ்வளவுதான்.
மோடியா இந்த லேடியா என்று கேட்டவர் ஜெயலலிதா. உங்களுக்கு யார் வேண்டும்... குஜராத் மோடியின் மகன் ஹெச்.ராஜாவா? இல்லை தமிழ்நாட்டு லேடியின் மகன் நானா (தேர்போகி பாண்டியன்)?" என கேள்வி எழுப்பி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.