சிவகங்கை மாவட்டம், ராகினிப்பட்டியில் டாஸ்மாக் கடை பின்புறம் உள்ள முந்திரிக்காட்டில் கழுத்தில் பீர் பாட்டிலால் குத்தப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து காவல் ஆய்வாளர் சீராளன் தலைமையில் போலீசார் சென்று உடலை கைப்பற்றி மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர். பின்னர் உடலை சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையானவரின் கையில் ஜெயராமன், வசந்தி என்று பச்சை குத்தப்பட்டதை வைத்தும் உடலில் இருந்து கைப்பற்ற பட்ட ஏடிஎம் கார்டை வைத்தும் யார் என்று விசாரித்து வருகின்றனர்.
மது அருந்த அழைத்து வந்து கொலை செய்யப்பட்டாரா அல்லது முன் விரோதம் காரணமா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. சிவகங்கை நகரில் பீர் பாட்டிலால் இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.