ETV Bharat / state

சிறப்பு மரியாதை அந்தஸ்து: இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

ஒரு நபர் கோயிலுக்கு தனது பங்களிப்பை நன்கொடையாக அல்லது வேறு வகையில் வழங்கியிருந்தால் அவர்களை கோயில் நிர்வாகம் சார்பில் அங்கீகரிக்க வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

madurai branch high court
மதுரை கிளை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Jul 8, 2023, 2:55 PM IST

சிவகங்கை: தேவகோட்டை அருகே கண்டனூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு செல்லாயி அம்மன் திருக்கோயில், நினைத்த காரியம் நிறைவேறும் என பக்தர்களின் நம்பிக்கையைப் பெற்ற திருக்கோயிலாகும். தற்போது இத்திருக்கோயிலானது புதுப்பிக்கப்பட்டு வரும் ஜூலை 9ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த சில தினங்கள் யாக பூஜைகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து பல சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன. மேலும், பக்தி பரவசத்துடன் யாக சாலையிலிருந்து குடம் புறப்பாடு நடைபெறவுள்ளது .பின்னர், கோபுர கலசங்களுக்கும் மற்றும் மூலவர் சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. அதைத்தொடந்து மஹா தீபாராதனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வர். மேலும், இந்த கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: RN Ravi: உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!

மேலும், இத்தினத்தை முன்னிட்டும் மற்றும் திருவிழாக்காலங்களிலும் தனிநபருக்கு எந்தவிதமான சிறப்பு மரியாதை கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கக்கூடாது என்பதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கண்டனூர் கிராமத்தை சேர்ந்த சின்னன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி கோயில் நிர்வாக நடைமுறையில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனவும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும் என நீதிபதி கூறினார்.

மேலும், அதே வேளையில் பொது நலன் கருதி ஒரு விசயத்தை தெளிவு படுத்த வேண்டும். ஒரு நபர் கோயிலுக்கு தனது பங்களிப்பை நன்கொடையாக வழங்கியிருந்தால் அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அங்கீகரிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:வெற்றிமாறன் வெளியிட்ட 'படவா' முதல் தியேட்டரில் தீனிகளுக்கு 5% ஜிஎஸ்டி வரை.. இந்த வார சினிமா அப்டேட்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.