ETV Bharat / state

சீறும் காளைகளுக்காக தயாராகும் சிங்கம்புணரி 'ஜல் ஜல்' மணிமாலைகள்! - Singampunari manimalai

தைப்பொங்கல் நாளில் தங்களது ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்தில் அணிவிக்க ஜல் ஜல் சலங்கையுடன் கூடிய சிங்கம்புணரி மணிமாலை வாங்க ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்

சீறும் ஜல்லிக்கட்டு காளையின் கழுத்தில் அணிவிக்கப்படும் பிரசித்தி பெற்ற சிங்கம்புணரி மணிமாலை

author img

By

Published : Jan 3, 2023, 10:44 AM IST

சீறும் ஜல்லிக்கட்டு காளையின் கழுத்தில் அணிவிக்கப்படும் பிரசித்தி பெற்ற சிங்கம்புணரி மணிமாலை

சிவகங்கை: சிங்கம்புணரி பகுதியில் கலைநயத்துடன் உருவாக்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான வண்ணமிகு மணிமாலை மிகவும் பிரபலமானது. கண்களை கவரும் வண்ண வண்ண நூல்களை கொண்டும், நெஞ்சை மயக்கும் சப்தம் மிகுந்த சலங்கைளும் சேர்க்கப்பட்டு இந்த மணிமாலைகள் உருவாக்கப்படுகிறது. தைப்பொங்கல் நாளில் தங்களது ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்தில் இந்த மணிமாலைகளை அணிவித்து அழகு பார்ப்பது ஜல்லிக்கட்டு காளையர்களின் அதிக விருப்பமான ஒன்றாகும்.

வெண்கல நாயக்கன்பட்டி மணி, ஆறா வயல் மணி, 8 அறுவை மணி, அறியக்குடி மணி உள்ளிட்ட வகை வகையான மணிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த மணிமாலைகள் சுமார் ரூ.1500 முதல் 10,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சிங்கம்புணரி பகுதியில் தயாரிக்கப்படும் இந்த மணிமாலைகளை வாங்க தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு உரிமையாளர்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் செல்வார்கள்.

இந்த வண்ணமிகு மணிமாலைகள் அணிவிக்கப்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் வாடிவாசல் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அவிழ்த்து விடும்போது அதிலிருந்து எழும்பும் 'ஜல் ஜல்' ஓசை காளையின் வீரத்தையும் வேகத்தையும் அதிகப்படுத்தும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அந்த அழகான மணி மாலைகளுடன் ஓடி வரும் இந்த ஜல்லிக்கட்டு காளைகளைக் கண்டு அனைவரும் மகிழ்வார்கள்.

பாரம்பரிய தயாரிப்பாளர்கள் மட்டுமே உள்ளதால் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது. கடந்த வருடங்களில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்ட காலத்தில் நலிவடைந்த இந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இப்போது மிகுந்த உற்சாகத்துடன் புத்துயிர் பெற்றுள்ளது.

இந்த தொழிலாளர்கள் இரவு, பகல் பாராமல் ஜல்லிக்கட்டு மாலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மனித உழைப்பாலும் கற்பனை திறனால் மட்டும் தயாரிக்கப்படும் இந்த கலை நயமிக்க வண்ணமயமான மணிமாலைகள் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

பல வண்ணங்களில் தங்களது காளையின் நிறத்திற்கு ஏற்றபடி மணிமாலைகள் இவர்கள் தயாரித்து தருவது சிறப்பு அம்சமாகும். பல ஜல்லிக்கட்டு உரிமையாளர்கள் காத்திருந்து தங்கள் காளைகளுக்கான மணிமாலைகள் வாங்கிச் செல்வது இந்த சிங்கம்புணரி மணிமாலைக்கே உரிய சிறப்பு. ஜல்லிக்கட்டு காளையின் அழகையும், வீரத்தையும், வேகத்தையும் தீர்மானிக்கும் இந்த மாலையின் சிறப்பு என அதன் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: 2023 புத்தாண்டு; தங்க கவசத்தில் எழுந்தருளிய பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.