சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பஞ்சாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் மகன் சுரேஷ் (19).
உஸ்பெகிஸ்தானில் அக்டோபர் 1 முதல் 7ஆம் தேதி வரை ஜூனியர் உலக ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் 42 நாடுகளின் வீரர்கள் பங்கேற்றனர். இதில் உலக ஆணழகன் பட்டத்தை சுரேஷ் பெற்றார்.
இந்தியாவிற்குப் பெருமைசேர்த்த சுரேஷ் தனது சொந்த கிராமமான பஞ்சாத்திற்கு வருகைதந்தார். அப்போது அவருக்கு கிராம மக்கள் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர்.
மேலும் கிராம மக்கள் சார்பாகப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அவருக்குப் பணம், மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: கலாம் கனவு கானல் நீரானது ஏன்? - நேர்காணல் வெளியீடு!