ETV Bharat / state

'ஸ்டாலின் மிக ஆபத்தானவர்.. அன்றே நான் சொன்னேன் '- ஹெச்.ராஜா - Tn cm MK Stalin

கருணாநிதியை விட மு.க.ஸ்டாலின் ஆபத்தானவர் என்று ஓராண்டுக்கு முன்னரே நான் சொன்னேன் என்றும்; அதை தற்போது மு.க.ஸ்டாலின் நிரூபித்து வருகிறார் எனவும் பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

'ஸ்டாலின் மிக ஆபத்தானவர்.. அன்றே நான் சொன்னேன் '- ஹெச்.ராஜா
ஸ்டாலின் மிக ஆபத்தானவர்.. 'அன்றே நான் சொன்னேன் '- ஹெச்.ராஜா
author img

By

Published : Jan 10, 2023, 4:21 PM IST

Updated : Jan 10, 2023, 5:25 PM IST

'ஸ்டாலின் மிக ஆபத்தானவர்.. அன்றே நான் சொன்னேன் '- ஹெச்.ராஜா

சிவகங்கை அருகே கீழடியில் 18 சித்தர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த முன்னாள் தேசிய பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் ஆளுநர் விவகாரம் பற்றி கேட்டபோது, 'சட்டப்பேரவையில் ஆளுநர் உரை அன்று ஆளுநர் மட்டுமே பேச வேண்டும்; முதலமைச்சர் பேசியது மரபு அல்ல' என்றார்.

மேலும் அவர், 'இந்த மாதிரி ஏற்பு இல்லாத விஷயங்களை ஆளுநர் படிக்காமல் தவிர்ப்பது என்பது புதிதல்ல. ஏற்கனவே ஆந்திரா, கேரளாவில் இந்த மாதிரி பிரசிடென்சி இருக்கு. ஆளுநர் அவர்கள் இந்த ஊழல் அரசாங்கத்தைப் பற்றி உரையில் கூறமால் தவிர்த்து விட்டு சென்றதற்கு ஆளுநருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவிக்க வேண்டும்.

அவ்வையார், பாரதியார் குறித்த கவிதைகளை ஆளுநர் படித்தது பிரிண்டில் போகாது என்று சொல்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திராவிட மாடல், அமைதிப் பூங்கா, இதெல்லாம் இருக்கும் எனக் கூறுகிறார் அவர். 'Stalin is more dangerous than Karunanidhi' என ஓராண்டுக்கு முன்னரே சொன்னதை தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்.

'He is most immature Chief Minister' ஸ்டாலின் என நிரூபணம் ஆகி உள்ளது. மேலும் முதலமைச்சர் தன்னுடைய நடவடிக்கைக்கு மன்னிப்புக்கேட்பார். தன்னை திருத்திக் கொள்வார் என பாஜக நினைக்கின்றது. எதிர்பார்க்கின்றது' இவ்வாறு ஹெச். ராஜா கூறியுள்ளார்.

இதையும் படிங்க:கோவையில் ஆளுநரின் உருவ பொம்மையை எரித்த தபெதிகவினர் கைது

Last Updated : Jan 10, 2023, 5:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.