ETV Bharat / state

தாங்களே உருவாக்கிய குளம் - கிராம மக்கள் கொண்டாட்டம் - குடிநீர் பிரச்சனை

சிவகங்கை மாவட்டம் வண்டல் கிராமத்தை சேர்ந்த மக்கள் கிராமத்தின் தண்ணீர்த் தேவைக்காக பிரதான் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியோடு தாங்களே உருவாக்கிய குளத்தை திறந்து வைத்து பங்குனி உத்திர திருவிழாவை வித்தியாசமான முறையில் கொண்டாடினர்.

தாங்களே உருவாக்கிய ஊருணியை திறந்து வைத்து கிராம மக்கள் கொண்டாட்டம்

author img

By

Published : Mar 19, 2022, 6:51 AM IST

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்டல் கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல்லாண்டுகளாக நிலவி வந்த குடிநீர் பிரச்சனையைக் கருத்தில் கொண்டு, கிராமத்திலுள்ள 23 குடும்பங்கள் ஒன்றிணைந்து, சுமார் ரூ.80 லட்சம் மதிப்புள்ள 1.85 ஏக்கர் நிலத்தைக் கொடுத்து, பிரதான் என்ற தொண்டு நிறுவனத்தின் நிதி மற்றும் தொழில் நுட்ப உதவியோடு ஊரணி ஒன்றை அமைத்து, பங்குனி உத்தரத் திருநாளான இன்று(மார்ச் 18) அதனைத் திறந்து வைத்துக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

வண்டல் ஊராட்சித் தலைவர் முத்துக்குமார் கூறுகையில், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது வண்டல் கிராமம்.பொதுப்புழக்கத்திற்கு இங்குள்ள கண்மாயைப் பயன்படுத்தினாலும் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டனர். புதிதாக ஊரணிஅமைக்கப் பேசி முடித்து நிலம் தருவதற்கு ஒப்புக்கொண்டாலும், செலவுக்கு என்ன செய்வது என்று திண்டாடிக் கொண்டிருந்த வேளையில்,பிரதான் நிறுவனம் எங்களுக்குக் கைகொடுத்தது.

6 லட்சம் செலவில் ஊரணி

போதுமான வருவாய் கொண்ட கிராமம் இல்லையென்பதால், அவர்களின் உதவியே எங்களுக்கு ஊக்கமாக அமைந்தது. ரூ.6 லட்சம் செலவில் இந்த ஊரணியை அவர்கள் அமைத்துக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் தெற்கு வண்டல், வடக்கு வண்டல் மற்றும் மாடக்கோட்டை உள் கிராமங்களின் நெடுநாள் தண்ணீர் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது' என்றார்.

பிரதான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நரேந்திரநாத் கூறுகையில்,

'பிரதான் நிறுவனத்தின் இண்டிகோ சிஎஸ்ஆர்திட்டத்தின் மூலம் இந்த குளம் உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு வட இந்திய மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களில் வறுமை ஒழிப்பு மற்றும் கிராமங்களில் நிலவும் குடிநீர் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக பணியாற்றி வருகிறோம். வண்டல் கிராமத்தின் நெடுநாள் தேவையை இன்று நாங்கள் பூர்த்தி செய்துள்ளோம். சிவகங்கை மாவட்டத்தில் மேலும் சில கிராமங்களில் பணி செய்து வருகிறோம். மக்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில் மற்ற கிராமங்களிலும் எங்களது பணியைத் தொடருவோம்' என்றார். கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஊரணியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

உருவாக்கிய ஊருணி
உருவாக்கிய ஊருணி

அந்நிறுவனத்தின் திட்டத்தலைவர் முனைவர் சீனிவாசன் கூறுகையில்,

'ஊரணிக்காக வழங்கப்பட்ட நிலம் 1.85 ஏக்கர். அதில் தண்ணீர் நிறையும் பகுதி மட்டும் 1.10 ஏக்கர். சராசரியாக 2 மீட்டருக்கு குறையாத ஆழத்தைக் கொண்டுள்ளது. 10 ஆயிரம் கன மீட்டர் தண்ணீர் கொள்ளளவாகும். ஓராண்டில் 9 லிருந்து 11 மாதங்கள் தண்ணீர் நிற்கும். பிரதான் நிறுவனத்தின் மூலமாக ரூ.3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. உள்ளூரில் இடிபட்டுக் கிடந்த பழைய கோவிலில் இருந்த கற்களைக் கொண்டு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் சுற்றுவட்டாரத்தில் கல் படித்துறை கொண்ட ஊரணிகள் ஓரிரண்டே உள்ளன. ஊரணி அமைப்பதற்குத் தேவையான மணல், ஜல்லி, கல் மற்றும் உழைப்பு ஆகியவற்றை வண்டல் கிராம மக்களே வழங்கியுள்ளனர்' என்றார்.

இதையும் படிங்க:"பிராஜெக்ட் வரையாடு" திட்டத்தில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு - சூழலியல் ஆர்வலர்கள் வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.