சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 196 குடும்பங்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவருகின்றன. இந்த முகாமில் வசிக்கும் தேவராஜா என்பவரது மகன் கஜேந்திரன் என்பவருக்கும் இதே அகதிகள் முகாமைச் சேர்ந்த ரேகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகதிகள் முகாம் அருகே உள்ள பனிக்கனேந்தல் கண்மாயில் கஜேந்திரன் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அதே முகாமைச் சேர்ந்த மருதை என்பவரது மகன் புஷ்பராஜ் கஜேந்திரனின் மணப்பெண் குறித்து தவறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த மானாமதுரை காவல் துறையினர் புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.