ETV Bharat / state

'குக்கரோ குண்டூசியோ எதில் நின்றாலும் வெற்றிபெற செய்யுங்கள்' - அமமுக வேட்பாளர் - அமமுக வேட்பாளர்

சிவகங்கை: குக்கரோ குண்டூசியோ எந்த சின்னத்தில் நின்றாலும் என்னை வெற்றிபெற செய்யுங்கள் என்று சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி பேசியுள்ளார்.

அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி
author img

By

Published : Mar 24, 2019, 7:34 PM IST

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி நாடே உற்று பார்க்கும் மிக முக்கியமான வி.ஐ.பி தொகுதியாகும். இந்த தொகுதியில் அதிமுக, பாஜக கூட்டணி சார்பில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் சற்றுமுன்தான் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்த டிடிவி தினகரனின் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேர்போகி பாண்டி தேர்தல் பிரச்சாரத்தை முன்னதாகவே துவங்கி தொகுதியின் ஒவ்வொரு பகுதியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். இன்று சிவகங்கையில் உள்ள தனியார் மஹாலில் அமமுக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து பேசிய மாவட்ட செயலாளர் உமாதேவன், அம்மா சிறையில் இருக்கும்போது அவர்களுக்கு வழங்கிய தண்ணீரில் சோப்பு பவுடரை தெளித்ததாகவும் அதேபோல் அவருக்கு வழங்கிய உணவில் கரப்பான்பூச்சி வைத்து வழங்கியதாகவும் கூறினார். அத்தனை துரோகத்திற்கும் காரணம் கார்த்தி சிதம்பரம் என்றும் அதனால்தான் அம்மாவின் ஆவி அவர்களை துரத்துவதாகவும் தெரிவித்தார்.

அதன்பின் வேட்பாளர் தேர்போகி பாண்டி பேசும்போது, தான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் மிட்டாமிராசு குடும்பத்தை சேர்ந்தவன் இல்லை என்றும் தான் அமெரிக்காவிலோ அல்லது ஆப்பிரிக்கவிற்கோ சென்று படிக்கவில்லை என்றும் சாதாரண பள்ளியில் படித்தவன் என்றார்.

அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி
கடந்த தேர்தலின் போது போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் தனது பரம்பரை குறித்தும், தான் வெளிநாட்டில் பயின்றது குறித்தும் தேர்தல் பரப்புரை துண்டு பிரசுரம் மூலம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஐம்பது ஆண்டுகள் நம்மை நாசப்படுத்தியவர்களும் 15 ஆண்டுகள் நாசப்படுத்திய பா.ஜ.கவையும் துறந்து ஒவ்வொரு வாக்கு பெட்டிகளை என்னும் போதும் கை, தாமரையை தேடும் நிலைக்கு தள்ள வேண்டும் என்று தொண்டர்களை வலியுறுத்தினார். ஒற்றுமையாக இருந்த அதிமுகவை பிரித்தவர்கள் பாஜகவினர் என்றும் ஒரு வேளை நாளை நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் குக்கர் சின்னம் அல்லது குண்டூசி சின்னத்தோடு வருவேன் என்றும் என்னை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றும் தேர்போகி பாண்டி கேட்டுக்கொண்டார்.

சிவகங்கை  ஆனந்த்
மார்ச்.24

குக்கரோ குண்டூசியோ எதில் நின்றாலும் என்னை வெற்றிபெற செய்யுங்கள் - அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி

சிவகங்கை: குக்கரோ குண்டூசியோ எந்த சின்னத்தில் நின்றாலும் என்னை வெற்றிபெற செய்யுங்கள் என்று அமமுக நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் தேர்போகி பாண்டி தொண்டர்களிடம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி இந்தியா முழுவதும் உற்று பார்க்கும் மிக முக்கியமான வி.ஐ.பி தொகுதியாகும். இந்த தொகுதியில் அதிமுக, பாஜக கூட்டணி சார்பில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் சற்றுமுன்தான் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்த டி.டி.வி.தினகரனின் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேர்போகி பாண்டி தேர்தல் பிரச்சாரத்தை முன்னதாகவே துவங்கி தொகுதியின் ஒவ்வொரு பகுதியாக சுற்றுப்பயணம் மேமேற்கொண்டு வருகின்றார். 

இன்று சிவகங்கையில் உள்ள தனியார் மஹாலில் அமமுக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டமானது மாவட்ட செயலாளர் கே.கே.உமாதேவன் தலைமையில் நடைபெற்றது. 

இதில் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து பேசிய மாவட்ட செயலாளர் உமாதேவன், அம்மா சிறையில் இருக்கும்போது அவர்களுக்கு வழங்கிய தண்ணீரில் சோப்பு பவுடரை தெளித்ததாகவும் அதேபோல் அவருக்கு வழங்கிய உணவில் பாச்சனை வைத்து வழங்கியதாகவும் கூறினார்.

அத்தனை துரோகத்திற்கும் காரணம் கார்த்தி சிதம்பரம் என்றும் அதனால்தான் அம்மாவின் ஆவி அவர்களை துரத்துவதாகவும் தெரிவித்தார்.

 அதன் பின் வேட்பாளர் தேர்போகி பாண்டி பேசும்போது, தான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் மிட்டாமிராசு குடும்பத்தை சேர்ந்தவன் இல்லை என்றும் தான் அமெரிக்காவிலோ அல்லது ஆப்பிரிக்கவிற்கோ சென்று படிக்கை வில்லை என்றும் சாதாரண பள்ளியில் படித்தவன் என்றார்.

 கடந்த தேர்தலின் போது போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் தனது பரம்பரை குறித்தும் தான் வெளிநாட்டில் பயின்றது குறித்தும் தேர்தல் பரப்புரை துண்டு பிரசுரம் மூலம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் வேட்பாளர் பேசும்போது ஐம்பது ஆண்டுகள் நம்மை நாசப்படுத்தியவர்களும் 15 ஆண்டுகள் நாசப்படுத்திய பா.ஜ.கவையும் துறந்து ஒவ்வொரு  வாக்கு பெட்டிகளை என்னும் போதும் கை, தாமரையை தேடும் நிலைக்கு தள்ள வேண்டும் என்றும் பேசினார்.

ஒற்றுமையாக இருந்த அதிமுகவை பிரித்தவர்கள் பாஜகவினர் என்றும் ஒரு வேளை நாளை நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் கிடைத்தால் குக்கர் சின்னம் அல்லது குண்டூசி சின்னத்தோடவாவது வருவேன் என்றும் என்னை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.