சிவகங்கை: நான் அண்ணனாக மதிக்கிற முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சென்னை மெரினா கடலுக்குள், கருணாநிதிக்கு சிலை அமைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரின் கருத்தை வரவேற்பதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தனது உடன் பிறந்த சகோதரியான அன்பரசியின் இல்லவிழாவில் இன்று (பிப்.4) பங்கேற்றார். அவரது உடன் பிறந்த சகோதரியான அன்பரசியின் மகள் கயல்விழிக்கு சிவகங்கையில் உள்ள தனியார் திருமண மஹாலில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இந்த விழாவில் தாய்மாமனாக சீமான் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் செய்தியாளர்களின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருணனின் 'கருணாநிதி பேனா சிலை' (Pen Statue for Karunanidhi) அமைப்பது குறித்த கேள்விக்கு, அவரின் கருத்திற்கு வரவேற்பளிப்பதாகவும் அதற்கு நன்றி தெரிவித்தார். மேலும், கடல் என்பது கட்சிக்கோ, மீனவர்களுக்கோ சொந்தமானதல்ல என்றும் அது பொது சொத்து என்றும் கூறினார்.
இதையும் படிங்க: ரூ.3 லட்சத்தில் மதிப்பீட்டில் 16 அடி உயர பேனா சிலை வைத்த திமுக நிர்வாகி!
கடல் என்பது எங்கள் சொத்து அதில் கை வைக்க எந்த கொம்பனாலும் முடியாது எனவும் நான் அண்ணனாக மதிக்கிற மாண்புமிகு முதலமைச்சரிடம் கேட்கிறேன், அய்யாவிற்கு கடலுக்குள் சின்னம் வேண்டாம்! என்றும் வேண்டும் என்றால் அறிவாலயத்திலோ (அ) அவர் கட்டிய அண்ணா நூலகத்திலோ (அ) மதுரையில் கட்டவிருக்கும் நூலத்திலோ அமைத்துக்கொள்ளலாம் என்று கூறினார்.
உரிமையில் திட்டும் அண்ணன்: மேலும் பேசிய அவர், தன்னை அமைச்சர் சேகர்பாபு அண்ணன் உரிமையில் திட்டி வருவதாகவும், அவர் பேசியது பழைய டயலாக்; அது அவருக்கே தவறான செயல் என தெரியும் என தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் (Erode East By-Election) உறுதியாக வெல்வோம் எனத் தெரிவித்தார். இலங்கையிலிருந்து அகதிகள் தமிழ்நாடு வருவது என்பது இன்னும் அங்கு தமிழர்கள் வாழ முடியாத சூழலையே காட்டுகிறது. போர் முடிந்து 14 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் இங்கு குடியுரிமை இல்லை எனவும் திபெத்திற்கு இங்கு வர உரிமையுள்ளது.
தனி ஈழம்: ஆனால், தமிழர்களுக்கு இல்லை எனக் கூறியதுடன், இன்னும் அந்த நிலைதான் உள்ளது என்பதை ஆட்சியாளர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றார். ஓராண்டில் தேர்தல் வருவதால் நிதிநிலையை வாசித்து சென்றிருக்கிறார்கள். அதனைக் கேட்டு சிரித்துக்கொண்டே செல்ல வேண்டும். அதனால், ஒரு பயனும் இருக்காது என்று கூறினார். அதிமுக உட்கட்சி பிரச்சினையில் கருத்து கூற இயலாது என்று பேசினார். மேலும், இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழர்கள் வருவதை தடுக்க ஒரே வழி, 'தனி ஈழம்' அமைவதே அது விரைவில் நிறைவேறும் என்று கூறினார்.
இதையும் படிங்க: பேனா நினைவுச் சின்னம்: கடலில் அமைத்தால் தூக்கி வீசிவிடுவோம் - சீமான் காட்டம்