மதுரையை சேர்ந்தவர் லெட்சுமணன். இவர் இன்று சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்தவர்கள் கருணாநிதி-சுசிலா தம்பதி. இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு சொந்தமான வீட்டை விற்பனை செய்யவுள்ளதாக, அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மூலம் விளம்பரம் செய்தார். இதை பார்த்த நான் தம்பதிகளை தொடர்புக் கொண்டு வீட்டை வாங்க விருப்பம் இருப்பதாக தெரிவித்தேன். அதற்கு வீட்டின் மதிப்பு ரூ. 28 லட்சம் என்றனர். இதை நம்பி அவர்களிடம் பத்திரம் ஏதும் வாங்காமல் ரூ. 28 லட்சத்தை கொடுத்தேன்.
பணம் கொடுத்து பல நாட்களாகியும் அவர்கள் எனது பெயருக்கு வீட்டை எழுதி தராமல் மோசடி செய்துள்ளனர். பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றும் தம்பதி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று தருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து குற்றப்பிரிவு போலீசார் சுசிலா, கருணாநிதி மற்றும் விக்னேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது மட்டுமல்லாமல் கருணாநிதியை இன்று கைது செய்தனர்.