சிவகங்கை: இளையான்குடி கூட்டுறவுச் சங்க கள ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்தவர் வினோத் ராஜா. இவர் அப்பகுதியில் பணிபுரியும் நியாயவிலைக் கடை பணியாளரைத் தரக்குறைவாகப் பேசியதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து அவரைப் பணியிடமாற்றம் செய்து இணைப்பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரது ஆதரவு சங்கத்தினர் இணைப் பதிவாளர் அலுவலகத்தில் சமையல் செய்து நூதன போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது பணியிட மாற்ற ஆணையை ரத்துசெய்ததாகக் கூறப்படுகிறது.
அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்கள் சார்பில் பணியிடமாற்ற ஆணையை நடைமுறைப்படுத்த கோரி அதே இணைப் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சுமார் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் தன்னிச்சையாகச் செயல்பவதாக இணைப் பதிவாளரைக் கண்டித்து கோஷங்களும் எழுப்பினர்.
இதையும் படிங்க: ரயில்வே ஸ்டேஷனில் குடும்பமாக லூட்டி அடிக்கும் யானைகள்