ETV Bharat / state

மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

சிவகங்கை: மின்சார துண்டிப்பை சரிசெய்யாமல் மின்ஊழியர்கள் அலட்சியம் காட்டியதால் ஆத்திரமடைந்த ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
author img

By

Published : May 27, 2019, 1:31 PM IST

சிவகங்கை அருகே சூரக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட பொன்னாம்பட்டி, முடிக்கரை, ஆனமாவளி உள்ளிட்ட ஏழு கிராமங்களில் மே 24ஆம் தேதி முதல் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் கோடை வெயிலில் இயல்பு வாழ்க்கை பாதித்ததோடு விவசாய பணிகள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளன.

தர்ணா போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்கள்

இது தொடர்பாக பல முறை புகார் தெரிவித்தும் மின் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்காததால் நாட்டரசன்கோட்டை மின் வாரிய அலுவலகத்தை கிராம மக்கள், விவசாயிகள் நெல் நாற்றுகளுடன் முற்றுகையிட்டு அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

சிவகங்கை   ஆனந்த்
மே.27

மின்சாரம் துண்டிப்பால் மின்வாரிய அலுவலகம் முற்றுகை

சிவகங்கை அருகே கடந்த சிலநாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சிவகங்கை  அருகே சூரக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட பொன்னாம்பட்டி, முடிக்கரை, ஆனமாவளி உள்ளிட்ட 7
கிராமங்களில் கடந்த 24 ந் தேதி முதல் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் கோடை வெயிலில் இயல்பு வாழ்க்கை பாதித்ததோடு விவசாய பணிகள் முற்றிலும் பாதித்தது. 

இது தொடர்பாக  பல முறை புகார் தெரிவித்தும் மின் வாரியம் அலட்சியம் காட்டி நடவடிக்கை இல்லாததால் நாட்டரசன்கோட்டை மின் வாரிய அலுவலகத்தை கிராம மக்கள் விவசாயிகள் நெல் நாற்றுகளுடன் முற்றுகையிட்டு அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து  தர்ணா வில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் சூறைகாற்று மற்றும் மழையால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கபட்டது.  புகார் கூறியும் மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதால் பல பகுதியில் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. குளிக்க, குடிக்க தண்ணீர் கூட கிடைக்காத நிலை உள்ளது செல்போன் சார்ஜ் போட கூட பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது இதில் ஆத்திரம் அடைந்து இன்று நாட்டரசன்கோட்டை மின் வாரியத்தை முற்றுகையிட்டனர்.

 காலை 8 மணிக்கு பணிக்கு வர வேண்டிய அதிகாரிகளும் இல்லாத நிலை இருந்ததால் வாயில் முன்பு அமர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.